260.மை வண்ண மேனி(பொன்னொன்று கண்டேன்)

 

மை வண்ண மேனி என் கண்ணனே நீ
மெய்யே நீ மெய்யில் வந்தாயடா
என நெஞ்சை கொள்ளை கொண்டாயடா
(SM)
கார் வண்ண மேனி பார் வந்த மெய் நீ
தேர் நின்றே கீதை சொன்னாயடா
யார் உன்னைச் சொல்லில் சொல்வாரடா

(Instrumental Breal)

உனக்காக நெஞ்சும் உனைக் காணக்  கண்ணும்
கணந்தோறும் கெஞ்சும் உனக்காக ஏங்கும்
எதற்காக என்றே எதுவும் இலாமல்
பித்தாகும் வண்ணம் அலையும் என் நெஞ்சம்

மனம் கவரும் 
பேரழகே
மனம் கவரும் பேரழகே
உலகில் வரும் 
இறை முழுதே
உலகில் வரும் இறை முழுதே

உன்னோடு மனமாடும் தருணங்கள் பொன்னல்லவோ
 கண்ணா   ..ம்ஹ்ம்
மன்னா   .. ம்ஹ்ம்
க்ருஷ்ணா    ...

மை வண்ண மேனி என் கண்ணனே நீ
மெய்யே நீ மெய்யில் வந்தாயடா
என நெஞ்சை கொள்ளை கொண்டாயடா

கார் வண்ண மேனி பார் வந்த மெய் நீ
தேர் நின்றே கீதை சொன்னாயடா
யார் உன்னைச் சொல்லில் சொல்வாரடா

(Instrumental Breal)

எனக்காகவே-நான் என்றே-இலாமல் 
பிறர் துன்பம் போக்கி  நான் வாழ அருள் செய் 
என் பாதை என்றே முரடாய்-இலாமல் 
பிறர் சொல்லைக் கேட்கும் மனம் கொள்ள  அருள் செய் 
உன் மொழியே 
நிஜம் அதனால்
உன் மொழியே  நிஜம் அதனால்
உன் வழியில்
நான் நடக்கும்
உன் வழியில் நான் நடக்கும் 
குணம் கொண்டு நான் வாழ வழி செய்து அருள்வாய் கண்ணா

கண்ணா   ..ம்ஹ்ம்
மன்னா   .. ம்ஹ்ம்
க்ருஷ்ணா    ...

மை வண்ண மேனி என் கண்ணனே நீ
மெய்யே நீ மெய்யில் வந்தாயடா
என நெஞ்சை கொள்ளை கொண்டாயடா

கார் வண்ண மேனி பார் வந்த மெய் நீ
தேர் நின்றே கீதை சொன்னாயடா
யார் உன்னைச் சொல்லில் சொல்வாரடா


முதல் பக்கம் Part II


Comments