விடியும் விடியும் என்று காத்து காலம் போகுது (2)
உன் அடியவர்களின் நெஞ்சம் வாடி தினமும் ஏங்குது
விடியும் விடியும் என்று காத்து காலம் போகுது

(MUSIC)
உயிர் என்று ஜீவன் படைத்து வினை என்று அதனில் இணைத்து
மனம் தந்து வாட்டுகிறாயே இது என்ன ஞாயாமோ ?

நல்லவர் உள்ளம் நோவது என்றால் அதற்கும் பாவக் கணக்கு
எனச் சொல்ல கடவுள் எதற்கு .. சொல்ல நீயும் எதற்கு
விடியும் விடியும் என்று காத்து காலம் போகுது
உன் அடியவர்களின் நெஞ்சம் வாடி
தினமும் ஏங்குது ஐயோ தினமும் ஏங்குது
(MUSIC)
விழியென்னும் ஊற்றினில் பாசம் கரமென்னும் ஆற்றினில் அன்பும்
தரும் கோடி தாயே கடவுள் என உன்னைச் சொல்கிறார்

அதன்படி உன்னை எண்ணிடும் வண்ணம் நடந்துடன் காட்டி விடு
அது தானே உனக்கு அழகு அதில் என்ன உந்தன் பிணக்கு
விடியும் விடியும் என்று காத்து காலம் போகுது
உன் அடியவர்களின் நெஞ்சம் வாடி
தினமும் ஏங்குது ஐயோ தினமும் ஏங்குது
Comments
Post a Comment