256.நெஞ்சே விழித்திடுவாய்(அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்)**



நெஞ்சே விழித்திடுவாய் நினைத்திடுவாய் ராமபிரானை
கொஞ்சம் பழகிடுவாய் சொல்லிடவே அவன்திருப்பேரை 
பாசக்கயிறை ஏந்தி சிரித்து யமன்வரும்போது
வந்து காத்திடுமா துணைவருமா செல்வம் அப்போது 
நெஞ்சே விழித்திடுவாய் நினைத்திடுவாய் ராம பிரானை ராம பிரானை
(MUSIC)

அலைந்து திரிந்து பொன்பொருளை ஓடியாடி 
நீ பைநிறைய சேர்த்திடுவாய் கோடி கோடி
இறக்கும் வேளைத் துடிப்பிலே
மரணம் வந்த போதிலே 
இரக்கம் கொண்டு படுத்திடுமோ உந்தன் பணம் காட்டிலே
உனக்கு பதில் காட்டிலே 
நெஞ்சே விழித்திடுவாய் நினைத்திடுவாய் ராம பிரானை 
இங்கே சிரித்து தினம் பார்த்திருக்கான் யமன் அந்த நாளை
(MUSIC)

கோணல் கொண்ட நெஞ்சினிலே கஷ்டம் தானடா  
பணம் பெறுவதற்கு அனுதினமும் திட்டம் ஏனடா 
இறைவன்-ராம நாமமே தாயும்-தந்தை தானடா
 இந்தஉண்மை தனை-மறந்து தனை-மறந்தாய் மானிடா 
பணம்-பதவி வீணடா
நெஞ்சே விழித்திடுவாய் நினைத்திடுவாய் ராம பிரானை ராம பிரானை
(MUSIC)

ஆட்டம் போட்டு எனதுஎனது என்று சொல்கிறாய் 
நீ கொண்டுவந்த தென்னஎன்று எண்ண மறுக்கிறாய் 
நாமம்எதற்கு என்கிறாய்
நேரம்இல்லை என்கிறாய்
ஊனைக்கடந்து உள்புகாமல் மாயப்பிடியில் உழலுகிறாய்
தன்னை மறந்து உறங்குகிறாய்


 


Comments