255.எதுவும் உன்னருட் செயல் தானே(நிலவே என்னிடம் நெருங்காதே)**

இவ்வுடலைக் கொண்டு இவ்வுலகில் வந்த என் நிஜம் ஏதோ சொல் (2)
அய்யா
இவ்வுடலைக் கொண்டு இவ்வுலகில் வந்த என் நிஜம் ஏதோ சொல்
-----------------------------------------
எதுவும் உன்னருட் செயல் தானே எனச் சொன்னால் எனை யார் குறை சொல்ல (2)
எனக்குள் எதுவும் நீதானே என எனையே ஏன்-தான் நான்-தேட
எதுவும் உன்னருட் செயல் தானே எனச் சொன்னால் எனை யார் குறை சொல்ல

(MUSIC)
மானிடம் உயர்வே ஆகும் என்பார் 
அந்த உயர்வினைக் காணல் வேணும் என்பார்
(2)
உயர்வே உயர்வைத் தேடணுமா
பின் பேருக்கு உயர்வேன் சொல்லிடய்யா
எதுவும் உன்னருட் செயல் தானே எனச் சொன்னால் எனை யார் குறை சொல்ல
(MUSIC)
ஆடையைப் போலே மேனி தந்தாய்
என் உள்ளத்தின் உள்ளே நீ அமர்ந்தாய்
(2)
மூடிய உன் வாய் திறக்குமென்றே நான் வாடுகிறேனே அறிந்திலையோ
எதுவும் உன்னருட் செயல் தானே எனச் சொன்னால் எனை யார் குறை சொல்ல
(MUSIC)
அமைதி பொல்லாத போதையன்றோ
அதை ஓர்கணம் மட்டும்-ஏன் காட்டிச் சென்றாய்
(2)
அம்மது இழந்தே நான் அழுதேன் எந்த யுகத்தில் என்னை நீ தடுத்தணைப்பாய்
எதுவும் உன்னருட் செயல் தானே எனச் சொன்னால் எனை யார் குறை சொல்ல (2)
எனக்குள் எதுவும் நீதானே என எனையே ஏன்-தான் நான்-தேட
எதுவும் உன்னருட் செயல் தானே எனச் சொன்னால் எனை யார் குறை சொல்ல

Comments