ஆசைகள் போகும் வழி யாது மன ஓசைகள் ஓயும் வழி யாது
ஆசைக்கு ஆசை வழியாகும் அது ஓம் எனும் ஓசைக்கு வழிகோலும்
ஆசைகள் போகும் வழி யாது மன ஓசைகள் ஓயும் வழி யாது
(music)
மனம் ஒரு மந்தியைப் போலாகும் கணம் ஒரு மரம் தனில் அது ஏறும்
மனம் ஒரு மந்தியைப் போலாகும் கணம் ஒரு ஆசையில் அது தாவும்
அதனுடன் பிறந்த ஓர் பிணியாகும் அந்த ஆசையே ஆசைக்கு மருந்தாகும்
அதனுடன் பிறந்த ஓர் பிணியாகும் அந்த ஆசையே அதற்குநல் மருந்தாகும்
ஆசைகள் போகும் வழி யாது மன ஓசைகள் ஓயும் வழி யாது
(music)
புலன்வழி ஆசைகள் இல்லாமல் மற்ற நல் ஆசைகள் கொள்வாயே
புலன்வழி ஆசைகள் இல்லாமே மற்ற நல் ஆசைகள் கொள்வாயே
இறைவனின் ஆசையை அது காட்டும்-மெல்ல மெல்ல-நல் பக்தியை அது ஊட்டும்
மனதினில் பக்தியே வழியாகும் அதைக் கொள்ள நல் ஆசையே வழிகோலும்
ஆசைகள் போகும் வழி யாது மன ஓசைகள் ஓயும் வழி யாது
ஆசைக்கு ஆசை வழியாகும் அது ஓம் எனும் ஓசைக்கு வழிகோலும்
ஆசைகள் போகும் வழி யாது மன ஓசைகள் ஓயும் வழி யாது
Comments
Post a Comment