245.பாரதம் மாபெரும்(மலர்களிலே பல நிறம் கண்டேன்) **

பாரதம் மாபெரும் இதிஹாசம் இக வாழ்க்கையின் பாதையை அது காட்டும்
மாயையின் இருளினை உடன் போக்கும் அது ஞானத்தின் ஆதவன் ஒளியாகும்

(music)

பாருக்குள் பாரதம் ஒரு மேரு என்றிட விளங்குது ஏன் கூறு (2)
பாரினில் வாழ்க்கையின் அறம் கூறும் அந்த பாரதத்தால் தான் எனத் தேறு (2)
பாரதம் மாபெரும் இதிஹாசம் இக வாழ்க்கையின் பாதையை அது காட்டும்
(music)

சிந்தையில் இறைவனின் நினைப்போடு படித்திடப் போகும் வினை நூறு (2)
தந்தையும் தாயும்-நல் குருபோல அது போட்டிடுமே அறத்தின் சாறு 
தந்தையும் தாயும்-நல் குருபோல அது ஊட்டிடுமே அறத்தின் சாறு
பாரதம் மாபெரும் இதிஹாசம் இக வாழ்க்கையின் பாதையை அது காட்டும்
மாயையின் இருளினை உடன் போக்கும் அது ஞானத்தின் ஆதவன் ஒளியாகும்
பாரதம் மாபெரும் இதிஹாசம் இக வாழ்க்கையின் பாதையை அது காட்டும்

முதல் பக்கம் Part II

Comments