முத்துமுத்தாய் போதம் சொல்லிடுமே வேதம்
அத்தனை போதமும் சொல்லிடும் பாடமும் காட்டிடுமே உண்மை
(2)
படிக்க காலமென்ன அவ்வுண்மை விளங்க நேரமென்ன
காலன் சொல்லிட பாலன் கேட்ட பாடம் மேலும் என்ன
முத்துமுத்தே போதம் சொல்லிடுதே வேதம்
அத்தனை போதமும் சொல்லிடும் பாடமும் காட்டுவதே உண்மை
(MUSIC)
நெஞ்சில் உண்மை மெல்ல-மெல்ல எழுந்து-மேலோங்க (2)
வேதப்-படிப்பின் உணர்ச்சிப்-பெருக்கில் அமைதி மேலோங்க
கூடும் த்யானம் என்ன என் எண்ணம் போன மாயம் என்ன
அமுதம் வார்த்தது போல் இதயம் கிறங்கிப் போனதென்ன
முத்துமுத்தாய் போதம் சொல்லிடுமே வேதம்
அத்தனை போதமும் சொல்லிடும் பாடமும் காட்டிடுமே உண்மை
(MUSIC)
ஆத்ம ராகம் நாளும் ஓம்ஓம் என்று கேட்பதென்ன (2)
உலகு மறந்து உணர்வில் பிறந்து நாதம் கேட்பதென்ன
மறைந்த காயம் என்ன என்-மெய்ம்மை காட்சியாவதென்ன
வார்த்தை போய்விட தேகம்-போக ஜோதி ஆனதென்ன
முத்துமுத்தாய் போதம் சொல்லிடுமே வேதம்
அத்தனை போதமும் சொல்லிடும் பாடமும் காட்டிடுமே உண்மை
------------------------------------------------------------------------------------------------------------
Katopanishad:
------------------------------------------------------------------------------------------------------------
Nachiketas seeks everlasting Self-knowledge
Yama teaches Nachiketas the Atmic wisdom
The highest truth can be realised by all
The Atma is beyond the senses
Cut the tree of worldly illusion
The secret: learn and practise the singular Omkara
------------------------------------------------------
Comments
Post a Comment