238.சாகும் வரையில் சோதனை என்றால் (காதல் சிறகை காற்றினில் விரித்து) **

சாகும் வரையில்  சோதனை என்றால் வாழ யாருக்கும் பிடிக்குமா
போகும் வரையில் வேதனை என்றால் உன்னை உலகம் மதிக்குமா
இறைவா  உன்னை மதிக்குமா
(MUSIC)

எண்ணங்களாலே சோகம் கொடுத்து இரவும் பகலும் வதைக்கவா
இத்தனை சோகம் உலகினில் வைத்து இத்தனை சோகம் வாழ்க்கையில் வைத்து 
படைத்தாய் உனக்கே நல்லதா இறைவா உனக்கே நல்லதா
சாகும் வரையில்  சோதனை என்றால் வாழ யாருக்கும் பிடிக்குமா
போகும் வரையில் வேதனை என்றால் உன்னை உலகம் மதிக்குமா
இறைவா  உன்னை மதிக்குமா
(MUSIC)

ஒரு நாள் இன்பம் மறு நாள் துன்பம் வாழ்வில் இருத்தல் வேண்டுமா
உன்னை இன்னொருத்தர்  கேட்க இல்லாமே உன்னையும் ஒருத்தர் கேட்க இல்லாமே
அக்ரமம் செய்தல் வேண்டுமா அய்யே உனக்கிது போதுமா
(music)
வருந்திய உள்ளம் சோர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி
கண்கள் கரைந்து அலையாய் எழுந்தால் (2)
அதிலா முடியணும் என் விதி அதுவா நீ தரும் நல் கதி
சாகும் வரையில்  சோதனை என்றால் வாழ யாருக்கும் பிடிக்குமா
போகும் வரையில் வேதனை என்றால் உன்னை உலகம் மதிக்குமா
இறைவா  உன்னை மதிக்குமா

ஆ ...ஆ ..ம் ... ம்.. 

Comments