235.நீயும் நானும் உணர்வினில் ஒன்றே(பாலும் பழமும் கைகளில் ஏந்தி)

ம்..ம்ம் 
(Interlude)
நீயும் நானும் உணர்வினில் ஒன்றே உணர்வு அலையின் கடலினுள் சென்றே 
உண்மை இதனை அறிந்திடவென்றே பாதை த்யானம் என்றிடும் ஒன்றே

(music)

உண்ணும் உணவு உடலுக்குப் போலே உந்தன் உணர்வு உதவிடும் உள்ளே (2)
அந்த உணர்வை உடலுக்கும் மேலே செல்லப் பழக்கு த்யானம் ஒன்றாலே (2)
நீயும் நானும் உணர்வினில் ஒன்றே உணர்வு அலையின் கடலினுள் சென்றே 
உண்மை இதனை அறிந்திடவென்றே பாதை த்யானம் என்றிடும் ஒன்றே
(music)

*நோயைத் தாண்டும் விதம் அறியாமே நாளும் கலங்கும் மனம் புரியாமே (2)
யாரைக் கேட்போம் என விழிக்காதே மாயை விலகும் ஞானம் ஒன்றாலே (2)
நீயும் நானும் உணர்வினில் ஒன்றே உணர்வு அலையின் கடலினுள் சென்றே 
உண்மை இதனை அறிந்திடவென்றே பாதை த்யானம் என்றிடும் ஒன்றே
(music)

ஈன்ற சேய்க்கு தாய்ப் பாலைப்  பொழியும் அன்பே நல் வாழ்வின் எல்லை (2)
அதனைக் கொடுத்தே மனம் தனில் நிறைவாய்ப் புரியும் சேவை தான் அந்த பூஜை (2)
நீயும் நானும் உணர்வினில் ஒன்றே உணர்வு அலையின் கடலினுள் சென்றே 
உண்மை இதனை அறிந்திடவென்றே பாதை த்யானம் என்றிடும் ஒன்றே

ம்..ம்ம்

*அறியாமை நோய்

முதல் பக்கம் Part II

Comments