234. கருணையின் உருவம்(மலருக்குத் தென்றல் பகையானால்)

விருத்தம்
வானகத்தில் உள்ளவனே 
வையகத்தை ஆள்பவனே 
உன் அரசில் ஏதுமில்லை துன்பங்களை அல்லாமல்
துன்பங்களே எல்லாமே

__________________
கருணையின் உருவம் நீ ஆனால்  அவர் மனதினில் நிம்மதி கொடு இன்று
(1+SM+1)
எதற்கும் எம் கருமம் என்றானால் நீ செய்வது தான்-எது பணி என்று 
கருணையின் உருவம் நீ ஆனால்  அவர் மனதினில் நிம்மதி கொடு இன்று
(MUSIC)

பொறுமையில் சிகரம் அவர் ஆனால் அந்த பொறுமைக்குமே ஓர் எல்லை உண்டு (2) 
அது-வரை உன் அருள் இலையானால் உந்தன் பெருமைக்குமே ஓர் இழுக்கு உண்டு 
இறைவனின் வடிவம் நீயானால் அந்த பொறுமைக்குப் பலனைத் தா இன்று 
கருணையின் உருவம் நீ ஆனால்  அவர் மனதினில் நிம்மதி கொடு இன்று
 (MUSIC)

அவரது-இடுக்கண் சதமானால்  அந்த சோதனையால் நீ மகிழ்வு கொண்டு
இருப்பதுன் சாதனை என ஆனால் உன்னை வணங்குதலின் உன் பகை நன்று
என என் நெஞ்சம் நெருப்பானால் பின் அமைதி இல்லை பார் உனக்கென்று
கருணையின் உருவம் நீ ஆனால்  அவர் மனதினில் நிம்மதி கொடு இன்று
(MUSIC)

உனதரும்  தருமம் இதுவானால் நீ தந்திடும் துயரை விதி என்று
நினைத்திடும் விதியே எமதானால் அந்த விதி உனைத் தாக்கட்டும்  நனி நன்று 
(SM)
கருணையின் உருவம் நீ ஆனால்  அவர் மனதினில் நிம்மதி கொடு இன்று
எதற்கும் எம் கருமம் என்றானால் நீ செய்வது தான்-எது பணி என்று 
கருணையின் உருவம் நீ ஆனால்  அவர் மனதினில் நிம்மதி கொடு இன்று

முதல் பக்கம் Part II

Comments