228. மனிதனைப் போல்( மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள்) **

மனிதனைப் போல் அய்யன் உருவெடுத்தான்
அண்ணல் ராமனென்றே மண்ணில் அவதரித்தான்
(MUSIC)
மனிதனைப் போல் அய்யன் உருவெடுத்தான்
அண்ணல் ராமனென்றே மண்ணில் அவதரித்தான்
அலைகளின் மேல் அய்யன் துயின்றவன்தான் 
மண்ணில் காட்டிலும் மேட்டிலும் அலைய வந்தான்
(2)
அலைகளின் மேல் அய்யன் துயின்றவன்தான் 
மண்ணில் காட்டிலும் மேட்டிலும் அலையவந்தான்
(MUSIC)
ராமன்தன் மேனியில் மரவுரியின்-உடை 
தந்தையின் வாக்கினை மெய்யாக்கக் கொண்டான்
(2)
பொன்னினை மேனியில் சூடிய பெம்மான்
(SM)
பொன்னினை மேனியில் சூடிய பெம்மான்
அன்னையின் கண்ணில் நீரின் தாரை ஓடக் கண்டான்

அலைகளின் மேல் அய்யன் துயின்றவன்தான் 
மண்ணில் காட்டிலும் மேட்டிலும் அலையவந்தான்
(MUSIC)
தேன்நதி பால்நதி ஓடுமயோத்தியில் மக்களின் அன்பினைப் பெற்ற-நம் பெம்மான்
(SM)
பேரொளி பூமுகம் வீசிட நின்றான் 
பேரிடிபோல் தந்தை ஆணை கேட்டும் பெம்மான்
அலைகளின் மேல் அய்யன் துயின்றவன்தான் 
மண்ணில் காட்டிலும் மேட்டிலும் அலையவந்தான்
(MUSIC)
 பூ-மனம் கொண்டவன் கானகம் சென்றான் 
தம்பியும்  தாரமும் கூடவே சென்றார் 
(2)
(SM)
தானுமோர் பேரிடி தலைவிழக் கொண்டான் 
தயரதன் மண்ணில் வீழ்ந்து தானும் தெய்வம் ஆனான்
மனிதனைப் போல் அய்யன் உருவெடுத்தான்
அண்ணல் ராமனென்றே மண்ணில் அவதரித்தான்
அலைகளின் மேல் அய்யன் துயின்றவன்தான் 
மண்ணில் காட்டிலும் மேட்டிலும் அலைய வந்தான்
அலைகளின் மேல்-அய்யன் துயின்றவன்தான் 
மண்ணில் காட்டிலும் மேட்டிலும் அலைய வந்தான்
காட்டிலும் மேட்டிலும் அலைய வந்தான்
அலைய வந்தான் .. அலைய வந்தான்


முதல் பக்கம் Part II


Comments