226 ராம ராம்-எனும் ஜபமே(காதல் ராஜ்ஜியம் எனது)**

ராம ராம்-எனும் ஜபமே செய்யச் செய்ய உடன்- எழும் இதமே
அது-போலச் செய்திட தினமே நிஜமாக எழுமந்த நிஜமே
(2)
எந்நாளும் சாதனை இதுதான்
மெய்ஞ்ஞானப் பாதையும் இதுதான்
என்னும்-சேதியை நெஞ்சே நீ
கண்டு கொண்டாடு ஆனந்தம் இதுதான்
(2)
ராம ராம்-எனும் ஜபமே செய்யச் செய்ய உடன்- எழும் இதமே
அது-போலச் செய்திட தினமே நிஜமாக எழுமந்த நிஜமே
(MUSIC)
இங்கே ஒரு-காலும் உடனங்கே ஒரு-காலும்
வைத்தாடும் கலையை விடு
நெஞ்சே மட-நெஞ்சே-ஒரு நஞ்சே-என-ஆசை
கொண்டாடும் நிலையை விடு
(2)
எந்நாளும் லோகத்தில் பி டிப்பு 
கொண்டாட உனக்கில்லை சலிப்பு
ராம ராம் என உரைக்காயோ
என்றும் நில்லாமல் ஏனிந்தத்  தவிப்பு
ராம ராம்-எனும் ஜபமே செய்யச் செய்ய உடன்- எழும் இதமே
அது-போலச் செய்திட தினமே நிஜமாக எழுமந்த நிஜமே
(MUSIC)
கொஞ்சம் துளி நேரம் திரு ராம் ராம் எனத் தோன்றும்
தானாக  இன்பங்களும்
தோம்தோம் தக-தோம்தோம் தக-தோம்தோம் திமி-தோம்தோம்
என்றாட நோயே வரும்
நெஞ்சே-நீ அலைவதை நிறுத்து
சற்றேனும் பரமனை நினைத்து
அழகு ராமனின் திருநாமம்
கொஞ்சம் சொன்னாலே ஆனந்தப் பெருக்கு
ராம ராம்-எனும் ஜபமே செய்யச் செய்ய உடன்- எழும் இதமே
அது-போலச் செய்திட தினமே நிஜமாக எழுமந்த நிஜமே

முதல் பக்கம் Part II

Comments