225 ராமனின் காதை (மலர்களிலே பல நிறம் கண்டேன்) **

 

ராமனின் காதைத் தனிச் சிறப்பு
அதைக் கேட்பவர்க்கேதோ இனி பிறப்பு
கசந்திட வைக்கும் வினைக்குறும்பு
அதைப் போக்கிடும் ராம்-எனும் பேர் கரும்பு
ராமனின் காதைத் தனிச் சிறப்பு
அதைக் கேட்பவர்க்கேதோ இனி பிறப்பு
(MUSIC)
ராம கதை ரஸம் சுவை போதும்
காமமதை உடன் அது போக்கும்
(2)
மாயம் அற ராம் எனும் நாமம் தனை 
உரை எனும் ஈசனின் திருவாக்கும்
(2)
ராமனின் காதைத் தனிச் சிறப்பு
அதைக் கேட்பவர்க்கேதோ இனி பிறப்பு
 (MUSIC)
குரங்கினை அடக்கும் ராம் எனும் பேர்
அது நமக்களிக்கும் பாடத்தைக் கேள்
(2)
குரங்கு மனம்தனை அடக்கியுடன் சீர்
செய்திடுமாம் ராம் ராம் எனும் பேர்
(2)
ராமனின் காதைத் தனிச் சிறப்பு
அதைக் கேட்பவர்க்கேதோ இனி பிறப்பு
கசந்திட வைக்கும் வினைக்குறும்பு
அதைப் போக்கிடும் ராம்-எனும் பேர் கரும்பு
ராமனின் காதைத் தனிச் சிறப்பு
அதைக் கேட்பவர்க்கேதோ இனி பிறப்பு


முதல் பக்கம் Part II



Comments