நல்லோர் சங்கம் கொள்வாய் இன்றே
என்பது எதற்காக அதுவே நன்மை அதற்காக
சத்சங்கத்வே என்றே சங்கரர் கூறியதெதற்காக
அதிலே உண்மை காண்பது என்பது எளிதென்பதற்காக
கேள்விக்கதிலே பதில்தனை பெற்றே தெளிவது எதற்காக
கேள்வியின் உள்ளே பதிலைக்-காணும் திறம்-பெறுவதற்காக
நல்லோர் சங்கம் கொள்வாய் இன்றே
என்பது எதற்காக அதுவே நன்மை அதற்காக
(MUSIC)
தனி நின்ற போது பயம் என்றும்-உண்டு
துணை கொண்ட போது திறம் உண்டு-நன்று
பலர் வந்து சேர்ந்து பகிர்கின்ற போது
இருள் என்ற கோது அகல்கின்றதுண்டு
உண்மை என்று-பேர் கொண்டு வந்த-நல் தெய்வத்தின் மொழியாகும்
கண்ணனாகப்-பார் வந்தே போரினில் சொன்ன-நல் மொழியாகும்
நல்லோர் சங்கம் கொள்வாய் இன்றே
என்பது எதற்காக அதுவே நன்மை அதற்காக
(MUSIC)
தரை-நின்ற தேரை அசைப்பாரும் இல்லை
அதன் வலிமை எண்ணி மலைக்காதோர் இல்லை
தரை நின்ற தேரும் உருண்டோடிப் போகும்
பலர் கைகள்-சேர ஆடி-ஆடிப் போகும்
முழுதையும்-கற்றவர் தனித்திறம் பெற்றவர் உலகினில் எவருமில்லை
நாம்-நமக்குள்ளே கற்றதைப்-பகிர்ந்தால் எதுவுமே கடினமில்லை

Sathsangathve
Nissangathvam, Nissangathve Nirmohathvam, Nirmohathve Nischala Tathvam
Nischalatathve Jeevanmukti
By good
company, attain detachment. By detachment, get rid of delusion. By freedom from
delusion, attain equanimity. By equanimity, attain liberation."
Comments
Post a Comment