துறவே-இன்னொரு உறவானால்
உன் தயக்கம்-துறவில் ஏன்-நெஞ்சே
(2)
உறவே துறவினும்-சிறப்பானால்-கேள் உறவில் துயரம் ஏன்-என்றே
துறவே இன்னொரு உறவானால்
உன் தயக்கம் துறவில் ஏன் நெஞ்சே
(MUSIC)
இறைவனின் உறவே அத்துறவு
வேறுறவினில் இருக்கோ அதன் சிறப்பு
(2)
பாரினில் அடடா உன் உறவு
உன் வாழ்க்கையில் வருமோ உன் பிறகு
துறவே-இன்னொரு உறவானால்
உன் தயக்கம்-துறவில் ஏன்-நெஞ்சே
(MUSIC)
பாரினில் சிறப்பாய் பல புரிந்தாய்
நீ கொண்ட உன் பிறப்பை ஏன் மறந்தாய்
(2)
நீரலை ஓயும் ஓயுமென்றே நீ காத்திருக்காயோ குளித்திடவே
துறவே-இன்னொரு உறவானால் உன் தயக்கம்-துறவில் ஏன்-நெஞ்சே
(MUSIC)
துறவு என்றாலே காட்டில் இல்லே
அந்த உறவு-என்றாலும் வீட்டில் இல்லே
துறவு என்றாலே காவி இல்லே
அந்த உறவு- எந்நாளும் பூமி இல்லே
இறைவனின் உறவில் மகிழ்ச்சி உண்டாம்
அந்த உறவினும் உறவே துறவு என்பார்
துறவே இன்னொரு உறவானால்
உன் தயக்கம் துறவில் ஏன் நெஞ்சே
உறவே துறவினும் சிறப்பானால்
கேள் உறவில் துயரம் ஏன் என்றே
துறவே இன்னொரு உறவானால்
உன் தயக்கம் துறவில் ஏன் நெஞ்சே
Comments
Post a Comment