220 ஆதலின் கேள் சொல்கிறேன்(காதலின் பொன் வீதியில்) ** *பற்று

ஆதலின் கேள் சொல்கிறேன் நானொரு பண்பாடியே
இன்றேனும் அறிந்துகொள்வாய்-என் நெஞ்சே நீ உருப்படுவாய்
(2)
 (MUSIC)
உறவாம் தளையில் உனைப்  பிணைத்துக் கொண்டு-நீ 
வாடுகிறாய் தினம்-பாரில்
அது-சரியுமில்லை அவர் சதமுமில்லை 
 நீ அறிந்திடுவாய் மனம்-மாறி
(SM)
உனதறுபதிலும் இன்னும் உன்துறவில் நீ நழுவுகிறாய் தினம்-போல
உன்மகன்-மகளின்-பார் வாழ்வுதனை இன்னும் தழுவுகிறாய் தனம்-போல
ஆதலின் கேள் சொல்கிறேன் நானொரு பண்பாடியே
(MUSIC)
மனம்-ஆறுதலில் மணம்-ஆகிடவே  மன-மாறுதலே வழியாகும்
சொந்த உறவெனினும் உற...வாவதினும் உரமாவதுமே பழிபோக்கும்
(SM)
எந்த-உறவினிலும் பலகுறைகளுண்டு அதை-உதறுவதே பேரின்பம்
எந்தன் வார்த்தையுமே நீ கேட்டிலையேல் இனி நானுமில்லை உன் சொந்தம்
ஆதலின் கேள் சொல்கிறேன் நானொரு பண்பாடியே
இன்றேனும் அறிந்திடுவாய்-என் நெஞ்சே நீ உருப்படுவாய்

முதல் பக்கம் Part II


Comments