219 ஒரே பாதை( ஒரே பாடல் ) **

 


ஆ..
ஒரே பாதை உன்னை உணர்த்தும்
என்றே கீதை உண்மை உணர்த்தும்
(2)
ஒரே பாதை
(Music)
சாதல் வரையில் இருக்கும் மோகம்
உன்னை வருத்தும் என்றும் உறுத்தும்
(2)
மண்ணில் மயங்கி என்றும் கிறங்கி (2)
நெஞ்சே அடைந்தாய் அந்தோ சிரமம்
இன்னும் இருந்தால் என்றும் சிரமம்

ஒரே பாதை உன்னை உணர்த்தும்
என்றே கீதை உண்மை உரைக்கும்
ஒரே பாதை
(Music)
உண்மை இலையே உன்மெய் இலையே
உண்மை இலையேல் உன்மெய் இலையே
உண்மை விலையே உன்மெய் வலியே
உன்மெய் வலியேல் உண்மை இலையே

கிட்டும் பொழுதே எண்ணும் பொழுதே
எண்ணும் பொழுதே கிட்டும் முழுதே
(2)
ஒரே பாதை உன்னை உணர்த்தும்
என்றே கீதை உண்மை உரைக்கும்
இதே பாதை

முதல் பக்கம் Part II


Comments