217 பெரும்-விருந்தெதற்கு (பௌர்ணமி நிலவில்) **

பெரும்-விருந்தெதற்கு பசிதீர்ப்பதற்கு ஒரு-பிடிச் சோறே போதாதோ 
பதவிகள்-எதற்கு உதவி-செய்..வதற்கு இரக்கமும்-மனமும் போதாதோ
(SM)
பெரும்-விருந்தெதற்கு பசிதீர்ப்பதற்கு (2)
ஒரு-பிடிச் சோறே போதாதோ
பதவிகள்-எதற்கு உதவி-செய்..வதற்கு 
பதவிகள்-எதற்கு உதவிட உனக்கு

 இரக்கமும்-மனமும் போதாதோ இரங்கிடும் நன்மனம் போதாதோ
(MUSIC)
கம்பன் கதையோ பாட்டினிலே சொந்தக் கதையோ வீட்டினிலே (2)
அலையும்-விடுமோ வாழ்க்கையிலே-உன் ஸ்நானம் என்றோ சேவையிலே
நித்தம் உழலும் உலகில்-திரிந்து செல்வம் கிடைக்க பலவும் புரிந்து
என்றும் தனக்கே எனவே-நினைந்து எந்தன் குடும்பம் எனவே-பரிந்து
சென்றோடலே உன் புதுப்பாடமோ என்-நெஞ்சமே-உன் புது கீதையோ     
பெரும்-விருந்தெதற்கு பசிதீர்ப்பதற்கு ஒரு-பிடிச் சோறே போதாதோ 
பதவிகள்-எதற்கு உதவி-செய்..வதற்கு இரக்கமும்-மனமும் போதாதோ
(MUSIC)
உள்..ளம் உருகும் அந்-நொடியில் பாசம் முகிழ்க்கும் உன் விழியில் (2)
தன்னைக் கொடுக்கும் துடிமடியில் இறைவன் இருப்பான் உன் பிடியில்   
கண்ணீர் மழை-போல் விழி(ப்)பால் வழிய 
மண்ணில் துடிப்போர் துயரம் களைய  
கண்ணன் கீதை இதைத்தான் உரைக்க 
நெஞ்சம் தனிலே புகுமோ உரைக்க
சொல்லாலுமே உன்-அன்பை அளி 
எந்நாளுமே நல் சேவை புரி
(BOTH)
பெரும்-விருந்தெதற்கு பசிதீர்ப்பதற்கு ஒரு-பிடிச் சோறே போதாதோ 
பதவிகள்-எதற்கு உதவி-செய்..வதற்கு இரக்கமும்-மனமும் போதாதோ
இரங்கிடும் நன்மனம் போதாதோ
ம்..ஹ்ஹுஹஹ்ம்ஹ்ம் ஹ்ம்ஹ்ம்ஹ்ம் (3)

Comments