சேயின்னும்-நானே அறுபதும்-வீணே கேளதைக் கூறிடுவேன் ஓ
ஆசைகள் அறுத்தே வளர்ந்தார் பலரும் நானதைப் போல-இல்லை
(PIANO)
ஆசைகள் அறுத்தே வளர்ந்தார்-பலரும் நானதைப் போல-இல்லை
சேயென்று வந்தேன் அறுபதில்-தானே கேளதைக் கூறிடுவேன்
ஆசைகள் அறுத்தே வளர்ந்தார்-பலரும் நானதைப் போல-இல்லை
(MUSIC)
கூடொன்று கொண்டே உலகில்-பி..றந்தேன்
உணவால் நிரப்பி-வந்தேன் ஓ அதைத்-தான் செய்து-வந்தேன்
அதைத்-தான் செய்து வந்தேன்
தேடிடவென்றே உலகில்-பிறந்தேன் நானதை உணரவில்லை ஓ நானதை உணரவில்லை
நானின்னும் உணரவில்லை
புரிவும் பரிவும் கொண்டிடச் சொன்னார்
நானதைக் கொள்ளவில்லை
நானின்னும் கொள்ளவில்லை
நானின்னும் கொள்ளவில்லை
ஆண்டு-கடந்தது அறுபது-வந்தது
நாளும்-புதுப்புது ஆசைகளானது
ஆறடி-மேலே மேனி-வளர்ந்தது மட்டுமே-என்னாலே
ஆசைகள்-அறுத்தே வளர்ந்தார்-பலரும் நானதைப் போல-இல்லை
சேயென்று வந்தேன் அறுபதில்-தானே கேளதைக் கூறிடுவேன்
ஆசைகள் அறுத்தே வளர்ந்தார்-பலரும் நானதைப் போல இல்லை
(MUSIC)
ம்..ஹ்ம்ஹ்ம்… (4)
(MUSIC)
சேய்கொண்ட வாய்மை துணையெனத் தந்தார்
அதை-நான் உணரவில்லை ஓ அதை-நான் உணரவில்லை
அவள்-நெஞ்சத் தூய்மை நான்-தினம் பார்த்தேன்
பார்த்தே பயனுமில்லை ஓ.. பார்த்தும் மாற்றமில்லை
உடலில்..உலகில் முழுகியதாலே வேறேதும் பார்க்கவில்லை ..
சீரேதும் சேர்க்கவில்லை
ஆண்டு-கடந்தது அறுபது-வந்தது
நாளும்-புதுப்புது ஆசைகளானது
ஆறடி-மேலே மேனி-வளர்ந்தது மட்டுமே என்னாலே
ஆசைகள்-அறுத்தே வளர்ந்தார் பலரும் நானதைப் போல-இல்லை
சேயின்னும்-நானே அறுபதும்-வீணே என்பதை உணருகின்றேன்
ஆசைகள் அறுத்தே வளர்ந்தார் பலரும் நானதைப் போல இல்லை
Comments
Post a Comment