211 இதயம் தவிக்கின்றதே(#** இதயம் இருக்கின்றதே தம்பி)


 ( *மனம் VS இதயம் )
இதயம் தவிக்கின்றதே தம்பி தனியே தவிக்கின்றதே (2)
பாழும் மனம்-ஓடி ஆடிடும் கோலம் கண்டு
பாரில் மனம்-ஓடி ஆடிடும் கோலம் கண்டு
தவியாய்த் தவிக்கின்றதே தம்பி இதயம் தவிக்கின்றதே
இதயம் தவிக்கின்றதே தம்பி தனியே தவிக்கின்றதே
(MUSIC)
உலகே உடமை-என்று சொல்லி  ஓடிடும் மனதைக் கண்டு இதயம் தவிக்கின்றதே தம்பி தனியே  தவிக்கின்றதே
(SM)
உயர்-தடம் கருதாமல் உள்-இடம் பொருதாமல் வெளியே அலைகின்றதே தம்பி மனதும் அலைகின்றதே
இதயம் தவிக்கின்றதே தம்பி தனியே தவிக்கின்றதே
(MUSIC)
தானாக அறியா மல் சொல்லிய சொல் கேளாமல் (2)
தானாகப் பறக்கின்றதே தம்பி கேளாமல் பறக்கின்றதே
(SM)
நோய் வந்து அழும்-வரைக்கும் பாய்-தன்னில் விழும் வரைக்கும் வரம்பும் துளி இல்லையே தம்பி
அமைதல் அதற்கில்லையே
இதயம் தவிக்கின்றதே தம்பி தனியே தவிக்கின்றதே
(MUSIC)
ஒருமரத்தின் கிளிகள் போல் மனதும்-*நெஞ்சும் (2)
ஒன்றாய்ப் பிறந்திட்டதேஅந்தோ தனியாய்ப் பிரிந்திட்டதே 
கூடப் பிறந்து விட்ட கொடுமையினால் அந்தோ உளம் பரி தவிக்கின்றதே  தம்பி மனம் பரிகசிக்கின்றதே
இதயம் தவிக்கின்றதே தம்பி தனியே தவிக்கின்றதே


*நெஞ்சு , இதயம், உள்ளம் இவையெல்லாம் உள்ளுணர்வுக்கு (சித்தம்) ஒப்பாகக் கூறப்படுகிறது






Comments