209 கேளு இதனைக் கேளு (ஆறு மனமே ஆறு ) **



கேளு-இதனைக் கேளு ந்த கண்ணனின் கீதை கேளு (2)
சோர்ந்த-மனிதன் நிமிரும்-வழிக்கு இறைவன் உரையைக் கேளு
இறைவன் உரையைக் கேளு
(SM)
கேளு-இதனைக் கேளு ந்த கண்ணனின் கீதை கேளு
(MUSIC)
நன்றே உண்பாய் *சற்றே உண்பாய் சத்துவ குணத்துக்குதவி
உண்பதில்-இன்பம் உறக்க-எண்ணம் ராஜச-தமசச் சகதி
(2)
உணவில் பக்குவம் கொண்டிடணும்
வந்த-உணர்வில் சத்துவம் கண்டிடணும்
(1+SM+1)
அந்த உணர்வில்-இறைவன் உணர்வை அடைந்து
உடலின் உணர்வை வென்றிடணும்
** உணவில் இறைவன் தென்படணும்
கேளு-இதனைக் கேளு ந்த கண்ணனின் கீதை கேளு (2)
(MUSIC)
பலனை-எண்ணிக் கடமை-செய்தால் உனக்குப்-பிறக்கும் மயக்கம்
பலன் விழையும்-கேடு விலக்கி-விட்டால் ***உணர்வு-உயர பறக்கும்
(2)
கண்ணன் சொன்னது அன்றாகும் அது நடக்கும் என்பது இன்றாகும்
(1+SM+1)
இந்த இரண்டு வரியில் கிடைக்கும் நெறியே
அய்யா கீதையின் மெய்யாகும் (2)
கேளு-இதனைக் கேளு ந்த கண்ணனின் கீதை கேளு (2)
(MUSIC)
சேவை என்ற பூஜை தன்னைச் செய்ய மனிதப் பிறப்பும்
அன்புத் தந்தை கீதைக் கண்ணனும் மனித வடிவில் தெய்வம்
அவன் மனித வடிவில் வந்ததுவும் உயர் கீதை தன்னைத் தந்ததுவும்
(SM)
நம்மை மாற்றி-வாழ்வில் உயர-வைக்க ஆண்டவன் கொண்ட நல்ல மனம்
ஆண்டவன் கொண்ட நல்ல மனம்
கேளு-இதனைக் கேளு ந்த கண்ணனின் கீதை கேளு
சோர்ந்த-மனிதன் நிமிரும்-வழிக்கு இறைவன் உரையைக் கேளு
இறைவன் உரையைக் கேளு
கேளு-இதனைக் கேளு அந்த கண்ணனின் கீதை கேளு

*சற்றே = மிதமாக
** அன்னம் ப்ரம்மா 

*** Higher Conciousness


முதல் பக்கம் Part II

Comments