நீ வகுத்தாய் நல்ல பாதையினை
கொடுத்..தாய்-அதனை நல்ல கீதையென
(1+SM+1)
போரினிலே நெஞ்சை-சீர் திருத்தி (2)
கை தூக்கி விட்டாய் அதை நேர் நிறுத்தி (2)
நீ வகுத்தாய் நல்ல பாதையினை
கொடுத்..தாய்-அதனை நல்ல கீதையென
(MUSIC)
அர்ஜுனன் நெஞ்சினில் நல்லுறம் ஏற்றி
கீதையில் நல்ல மெய்வழி சாற்றி
(2)
நோயெனவே வந்த மோகத்தை மாற்றி (2)
பார் கொடுத்தாய் தர்மத்..தை-நிலை நாட்டி (2)
நீ வகுத்தாய் நல்ல பாதையினை
கொடுத்..தாய்-அதனை நல்ல கீதையென
(MUSIC)
பலனில் ஆசையை விட்டு ஆயர்கள் செல்வன் கண்ணனாம் நான்
சொல்வதைக் கேட்டு தவறாதெவர்க்கும் அன்பினில் சேவை செய்வார் எவர்க்கும்
தடையற உடனே வந்து தஞ்சம் தந்து நான் விழைந்து வாழ்த்தி அருளைச் செய்யுகின்றேன்
என்ற உன்குரலே பிறப்பின்
மருந்தாகும் மருந்தாகும் மருந்தாகும்
(MUSIC)
சூதுறா நெஞ்சில் அருள்-வந்து பூத்திருக்க (sm)
ஓர் பிள்ளை போல்-சென்று உன்-மடியைச் சேர்ந்திருக்க (sm)
கீதையாம்-நல்ல பால்-உண்டு அமைதி பெற (sm)
கண்ணனவன் கையில் தன் முழுதை தாரை என
பிள்ளை தரும்-சுகத்தில் தனை-மறந்து நினைவிழக்க
சாயுஜ்யம் வேறு இலை என்றோர் நிஜம் பிறக்க (sm)
கிட்டியது மோட்சம் (sm)
ஒளிர்ந்தது ஜோதிப் பழம் .. மட்டிலா ஆனந்தம்
மடை தாண்ட நிஜம் தோன்ற நிஜம் ஆக
(MUSIC)
உன்வசம் என்றே-என் நெஞ்சமும் ஆக
மடமை ஒழிந்தது உன் சொந்தம் ஆக
(1+SM+1)
படைத்தவன் நீ-வந்து சொன்னது போல (2)
ஆக்கிடப்பா-என்னை நீயும் நன்றாக
நீ வகுத்தாய் நல்ல பாதையினை
கொடுத்..தாய்-அதனை நல்ல கீதையென
வெம்-போரினிலே நெஞ்சை-சீர் திருத்தி
கை தூக்கி விட்டாய் அதை நேர் நிறுத்தி
அதை நேர் நிறுத்தி.. அதை நேர் நிறுத்தி
Comments
Post a Comment