205 உன்னை யாரென்று (என்னை யாரென்று எண்ணி)



உன்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்த்திடாய்
உன் மனம் தாண்டி சிதம் ஊடி உணர்வாகிடாய்
(2)
நான் எனும்-பேரில் அது-வாழும் நிஜமல்லவா
உன் தேடல் முடிகின்ற இடமல்லவா
உன்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்த்திடாய்
உன் மனம் தாண்டி சிதம் ஊடி உணர்வாகிடாய்
(MUSIC)
எங்கும் விலையாக அதற்கீடு கிடையாதய்யா
உருகாத மனம்-தன்னில் தெரியாதய்யா
(2)
நிணமான உடல் என்றும் தொடராதய்யா (2)
தேடாமல் உன்-வாழ்வு முடியாதய்யா
உன்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்த்திடாய்
உன் மனம் தாண்டி சிதம் ஊடி உணர்வாகிடாய்
(MUSIC)
என்றும் அவன் கோவில் சிலையாக இரல் ஏனம்மா 
புலராத மனம் கல்லென்..பதனாலம்மா 
(2)
மனம்-என்ற கல் ஊறிக் கரைந்தாலம்மா (2)
உள் தாண்டி கடந்தால் தான் கடவுள் அம்மா
உன்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்த்திடாய்
(MUSIC)
என்றும் தனக்காக உயிர்-வாழ்தல் *கடை இல்லையா-சுவர்
தனைப்-போன்ற மனம்-என்றும் தடையில்லையா
(2)
ஊன் தாண்டி உனைத்-தேடும் திறம்-கொள்ளய்யா
ஊன் தாண்டி உணர்வூடும் திறம்-கொள்ளய்யா
 உன்னோடு உடல்-ஓடு உணர்வா அய்யா
நம்மை யாரென்று எண்ணி எண்ணி வா பார்க்கலாம்
வெளி விளையாட்டு போதும் உள்ளே வா போகலாம்
நான் எனும்-பேரில் அது-வாழும் நிஜமல்லவா
உன் தேடல் முடிகின்ற இடமல்லவா
நான் எனும்-பேரில் அது-வாழும் நிஜமல்லவா
உன் தேடல் முடிகின்ற இடமல்லவா
நம்மை யாரென்று எண்ணி எண்ணி வா பார்க்கலாம்


*கடை=கடை நிலை 


Comments