204 மனமதிலே அதை ஜபம் செய்வோம்(மலர்களிலே பல நிறம் கண்டேன்)



மனமதிலே  அதன் சுடர் பெய்வோம்
மனமூடிய இருளை விடச் செய்வோம் 
மனமதிலே அதன் ஜபம் செய்வோம் 
மனம்மூடிய  மதிலை அதம் செய்வோம்
மனமதிலே  அதன் சுடர் பெய்வோம்
மனமூடிய இருளை விடச் செய்வோம் 
 (MUSIC)
இச்சையது -ஒரு பெரும்-வ்யாதி 
தன்னைச்-சுடும் அதன்-அருட்ஜோதி.. 
(2)
சஞ்சிதம்-என்..றிடும் முந்..தை-வினை 
தனை 
ன்கு-க..ரைத்..திடும் ஞானச்-சுனை 
(2)
மனமதிலே அதன் சுடர் பெய்வோம்
மனமூடிய இருளை விடச் செய்வோம் 
 (MUSIC)
*ஆறிரு-நாலிரு நாலாகும் 
அட்சரமே-மறை நாலாகும்
(2)
**மந்திரங்..களில்-நான் அதுவாகும்-எனச்  
சொல்வது ஆண்டவன் உரையாகும்
(2)
மனமதிலே  அதன் சுடர் பெய்வோம்
மனமூடிய இருளை விடச் செய்வோம் 
மனமதிலே அதன் ஜபம் செய்வோம் 
மனம்மூடிய  மதிலை அதம் செய்வோம்
மனமதிலே  அதன் சுடர் பெய்வோம்
மனமூடிய இருளை விடச் செய்வோம் 

*ஆறிரு-நாலிரு நாலாகும்=ஆறிரு(12)+நாலிரு(8)+நாலு(4)=24. (காயத்ரி மந்திம்)
** மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாக விளங்குகிறேன்-கீதை 



Comments