203 ஏழு நிலைகள்(ஆறு மனமே ஆறு)




ஏழு நிலைகள்-ஏழு மன வளர்ச்சி-நிலைகள் ஏழு (2)
ஆன்ம-முதிர்ச்சிக்..கேற்ப-மாந்தர் வாழும் நிலைகள் ஏழு 
வாழும் நிலைகள் ஏழு
(SM)
ஏழு நிலைகள்-ஏழு மன வளர்ச்சி-நிலைகள் ஏழு
(MUSIC)
நன்றே-செய்யார் கொன்றே-தின்பார் நிலையில்-அவர்கள் பாபி
மற்றவர்-துன்பம் கொள்வதில்-இன்பம் என்று அவரின் நியதி
(2)
என்றைக்கும்-பொய்மை கொண்டாடும் அவர் நெஞ்சத்தை-வாய்மை விட்டோடும்
(1+SM+1)
இந்த நிலையில்-வாழும் மனிதர்-மனதில் தன்னலம்-ஒன்றே நின்றாடும்
தன்னலம் தன்னலம் எக்காலும்
ஏழு நிலைகள்-ஏழு மன வளர்ச்சி நிலைகள் ஏழு (2)
(MUSIC)
உண்மையில்-கொஞ்சம் பொய்மையில்-கொஞ்சம் இருக்கும்- சிலரின் வாழ்வும்
அவர் புரியும்-புண்யம் சிறிதெனினும் பெரிது-என்று நினைக்கும்
(2)
உலக-சுகத்தில் மன்றாடும் அவர் பேரு-பாமரர் என்றாகும்
(SM)
உலக-சுகத்தில் மன்றாடும் நம் பேரு-பாமரர் என்றாகும்
இந்த நிலையை மட்டும் தாண்ட-எடுக்கும்
பிறவி நூறின் நூறாகும்
நினைக்க மனது நாராகும்   
ஏழு நிலைகள் ஏழு மன வளர்ச்சி நிலைகள் ஏழு (2)
(MUSIC)
  நல்-விவேகி சாது-மஹான் துறவி-ஞானி என்னும்
ஐந்தும்-கடந்து செல்லத் தோன்றும் தன்னை-உணரும் ஞானம்
இதைக் கடக்க-கருவம் விட்டிடணும் பெரும் பணிவை-முதலில் கற்றிடணும்
(SM)
அந்த நிலையை-அடைய கற்றிடப்-பெற்றிட கற்றவர் கூட்டைப் பற்றிடணும்
கற்றவரோடு ஒட்டிடணும்
ஏழு நிலைகள் ஏழு மன வளர்ச்சி-நிலைகள் ஏழு
ஆன்ம முதிர்ச்சிக்..கேற்ப-மாந்தர் வாழும் நிலைகள் ஏழு 
வாழும் நிலைகள் ஏழு
ஏழு நிலைகள் ஏழு மன வளர்ச்சி-நிலைகள் ஏழு
  

** NOTE
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.-
என்ற குறள் கூறுவது போல, திறமையாலும் அவரவர் மேன்மையும் சிறுமையும் அடைகிறார்.
அதைப் போல, மாந்தர்கள் அவரவர் ஆன்ம சாதனையால்  ஏற்பட்ட முதிர்ச்சிக்கேற்ப கீழ்க்கண்ட நிலைகளில் (படிகளில்) இருக்கிறார்கள் என்பதே நிஜம். இதை நாம் உணர்ந்து நம் நிலையறிந்து அடுத்த நிலைக்கு முன்னேற முயல்வதே நம் பிறவியின் நோக்கம்
மாந்தர்கள் இருக்கும் நிலைகள்.
பாபி, பாமரன், விவேகி,சாது,மஹான்,துறவி,ஞானி




Comments