202 தேடுவோம் (நாணமோ) - * இறைத்தேடல்



தேடுவோம் சென்று தேடுவோம்
சொந்த ரூபமாகிய ஒன்றை அந்த வேதம் கூறிடும் நன்றை
தேடுவோம் தேடுவோம்
தேடுவோம் சென்றே தேடுவோம்
தன்னைக் காண-நெஞ்சத்தின் உள்ளே
பதிலாகக்-கேள்வியின் உள்ளே தேடுவோம் தேடுவோம்
தேடுவோம் சென்று தேடுவோம்
சொந்த ரூபமாகிய ஒன்றை அந்த வேதம் கூறிடும் நன்றை
தேடுவோம் தேடுவோம்
(MUSIC)
பாட்டதில் கேட்டதில் இல்லாதது
வெறும் வார்த்தையின் பேச்சினில் கொள்ளாதது
(2)
தேடையில்-ஓடுது ஜாடையில் நம்மது
ஆனந்த வெள்ளத்தின் ஊற்றாமது … புது மது

கண்டவர் விண்டிடத் தோன்றாதது
அது விண்டவர் கண்டிட ஆகாதது
(1+SM+1)
சாதகன் நெஞ்சினுள் தேடுவது பாதகன் நெஞ்சையும் ஊடுவது அது பொது
தேடுவோம் சென்று  தேடுவோம்
தன்னைக் காண-நெஞ்சத்தின் உள்ளே பதிலாகக்-கேள்வியின் உள்ளே தேடுவோம் தேடுவோம்
(Music)

தூய்மையிலாகிடும் நெஞ்சாலது
தொழ ஆண்டவனாகிடும் என்றாவது
(2)
காலையும் மாலையும் செய்வது போலிலை
பூஜைகள் எண்ணத்தில் ஊற்றாகுது
அது அது..

சொன்னால் புரியும் சொல்லா அது
அது சொல்லாத சொல்லிலும் சொல்லாகுது
(1+SM+1)
யாரிலும் தான் என ஊறுவது ஞானத்தின் கண்களில் ஆறு அது
அது அது
தேடுவோம் சென்று தேடுவோம்
சொந்த ரூபமாகிய ஒன்றை அந்த வேதம் கூறிடும் நன்றை
தேடுவோம் தேடுவோம்
தேடுவோம் சென்றே தேடுவோம்
தன்னைக் காண-நெஞ்சத்தின் உள்ளே
பதிலாகக்-கேள்வியின் உள்ளே தேடுவோம் தேடுவோம்
வாவாவா ….






Comments