201 தேவைக்கு மேலெதற்கு(தெய்வத்தின் தேர்தெடுத்து)



தேவைக்கு மேலெதற்கு ஸ்வாமியைத் தேடு 
ஓரிடம் குந்தி அவன் பேரினைப் பாடு  
(2)
(MUSIC)
ஊருக்கு-நூறு உன்-பல-வீடு சதமில்லையம்மா தேடுது-காடு (2)
நாளையொன்றில்லை-என்று ஈசனைத் தேடு (2)
பாரில் கிடந்து-சும்மா இருப்பது-பீடு.. அதற்கிலை கேடு
தேவைக்கு மேலெதற்கு ஸ்வாமியைத் தேடு 
ஓரிடம் குந்தி அவன் பேரினைப் பாடு
(MUSIC)
தீப்-பற்றிக் கொண்டது-போல் உனக்கென்ன துடிப்பு 
எண்ணிரு வாலிபம்-போல் உலகத்தில் பிடிப்பு 
ஆட்டமும் போதும்-அம்மா உள்ளுக்குள்-இருப்பு
கொள்வது தான்-என்றோ உனக்கிலை பொறுப்பு 
உனக்கிலை பொறுப்பு   
தேவைக்கு மேலெதற்கு ஸ்வாமியைத் தேடு 
ஓரிடம் குந்தி அவன் பேரினைப் பாடு
(MUSIC)
உண்டிடத் தேவை என்ன  ஓர் பிடிச் சோறு 
உள்ளது  போதும் என வாழ்வதென் பீடு
(2)
வாழ்வினிலே எனக்கு தேவையுமில்லை (2)
நரை விழுந்தாலும்-அம்மா உனக்கது இல்லை 
உரைப்பதைக் கேட்கும்-குணம் துளி உனக்கில்லை
தேவைக்கு மேலெதற்கு ஸ்வாமியைத் தேடு 
ஓரிடம் குந்தி அவன் பேரினைப் பாடு
(MUSIC)




Comments