200 மனிதன் புரியும் தொண்டு(மனிதன் நினைப்பதுண்டு)

மனிதன் புரியும்-தொண்டு பார்க்கும் பிறருக்கென்று
இறைவன் விரும்பும் தொண்டு பாரில்  பிறருக்கென்று
மனிதன் புரியும்-தொண்டு பார்க்கும் பிறருக்கென்று (2)
இறைவன் விரும்பும்-தொண்டு வாழ்தல் பிறருக்கென்று (2)
மனிதன் புரியும்-தொண்டு பார்க்கும் பிறருக்கென்று
(MUSIC)
அன்புத் தந்தை-சொன்னான் வாழும் விதம்-கொடுத்தான் (2)
அதனை மறந்து-விட்டேன்-வெறும் ஞாயம் உரைத்து-நின்றேன் 
மனது-பதைக்கின்றது அறிவு-தடுக்கின்றது 
படித்து லாபமென்ன-மனம் கோழை ஆன-பின்பு
மனிதன் புரியும்-தொண்டு பார்க்கும் பிறருக்கென்று
(MUSIC)
ஞாயம் பிறர்-உரைத்தால் மனது கலைந்து-விடும் (2)
சேட்டை செயும்-திறத்தால்-சொந்தத் திறமும் குலைந்து விடும்
காலை எழுத்திருப்போம் ஊர்க்கு உரைத்திடுவோம் 
பூஜை செய்வதிலே வெறும் தன்னலம் வேண்டிடுவோம் 
மனிதன் புரியும்-தொண்டு பார்க்கும் பிறருக்கென்று
(MUSIC)
கடுகின் அளவினிலே-நாம் சிறிது உதவி-செய்தால் 
மலையின் மடங்குகளாய்-அதை உரைத்துத் தலை-கனப்போம் 
கொடுக்கும் நினைப்பு-வந்தால் தன் நினைப்பும் வருகுதம்மா 
கணக்கு பல-போட்டே நல்-நினைப்பும் கலையுதம்மா
மனிதன் புரியும்-தொண்டு பார்க்கும் பிறருக்கென்று
இறைவன் விரும்பும் தொண்டு பாரில்  பிறருக்கென்று

Comments

  1. அருமை 👌
    நல்வாழ்த்துகள்

    ReplyDelete

Post a Comment