விருத்தம்
வானகமும் அவனுருவே
வையகமும் அவனுருவே
வேறெதுவும் எங்குமிலை ஆண்டவனையல்லாமல்
ஆண்டவனே எல்லாமே
__________________
கணக்கினில்-ஒன்றே இரண்டானால்-அந்த இரண்டினில் தனித்தனி ஒன்றேது
(1+SM+1)
உடலுக்குள்-உயிரே உணர்வானால்-அந்த உணர்வினில் தனித்தனி என்றேது
கணக்கினில்-ஒன்றே இரண்டானால்-அந்த இரண்டினில் தனித்தனி ஒன்றேது
(MUSIC)
உணர்வுக்குப்-பிறகு நீ-போனால் அதில்-பிரித்துப் பார்த்திட பிறிதேது
(2)
உணர்வுக்கு-உணர்வே நீயானால்-உன்னை இரண்டெனக் காண்பதில் நிஜம்-ஏது
உணர்வினில்-யாதும் நீயானால் உனைத் தவிர்த்திங்கு-வேறே எது ஏது
கணக்கினில்-ஒன்றே இரண்டானால்-அந்த இரண்டினில் தனித்தனி ஒன்றேது
(MUSIC)
பிறரது-இடுக்கண் உனதானால் உன்னை நீ-உணர்-நாளும் விரைவில்-உண்டு
(2)
பிறர்-கொள்ளும் பீடே உனதானால்-பின்பு உலகினில்-உனக்கெது ஒருகேடு
கணக்கினில் ஒன்றே இரண்டானால் அந்த இரண்டினில் தனித்தனி ஒன்றேது
(MUSIC)
இரண்டுக்குள்-ஒன்றே இரண்டானால் அதில் ஒன்றே இரண்டெனக் காண்-என்று
மண்ணுக்கு-மனிதன் என-வந்தான்-அந்த உண்மையின் கூற்றே நிஜம் “ஒன்று”
(SM)
(both)
கணக்கினில் ஒன்றே இரண்டானால் அந்த இரண்டினில் தனித்தனி ஒன்றேது
உடலுக்குள் உயிரே உணர்வானால்-அந்த உணர்வினில் தனித்தனி என்றேது
கணக்கினில்-ஒன்றே இரண்டானால்-அந்த இரண்டினில் தனித்தனி ஒன்றேது
(both)முதல் பக்கம் Part II
அருமை..நல்வாழ்த்துகள்
ReplyDelete