198 எந்நாளும் என்னை எண்ணி( எல்லோரும் நலம் வாழ)



எந்நாளும் எனை-எண்ணித் தான்-வாழ்கிறேன்
நான்-வாழ இது-போதுமா
என்-பாட்டைத் தான்-எண்ணி நான்-வாழ்கிறேன்
அதில்-என்பாடு தான்-தீருமா
(1+SM+1)
(MUSIC)
பூப்போன்ற மனமன்று நீ-தந்தது
பொல்லாத பலவந்து அதில்-சேர்ந்தது
(2)
பிறர்க்கில்லாத சோகம் துளிவந்தாலும் போதும்
ஏன் வந்ததெனக்கென்று மனம்-நோகுது
எந்நாளும் எனை-எண்ணித் தான்-வாழ்கிறேன்
நான்-வாழ இது-போதுமா
என்-பாட்டைத் தான்-எண்ணி நான்-வாழ்கிறேன்
அதில்-என்பாடு தான்-தீருமா
(MUSIC)
கண்ணீரில் பலரிங்கு தினம்-வாடவே
அதைக் கண்டாலும் காணாமல் நான் ஓடுவேன்
(2)
ந்யாயங்கள் பல-கூறி நான் வாழலாம்
அதில் பாபங்கள் பல-சேர்த்துப் பாராளலாம்
எந்நாளும் எனை-எண்ணித் தான்-வாழ்கிறேன்
நான்-வாழ இது-போதுமா
என்-பாட்டைத் தான்-எண்ணி நான்-வாழ்கிறேன்
அதில்-என்பாடு தான்-தீருமா
(MUSIC)
நல்-பாதை என்-நெஞ்சில் எழுகின்றது 
நல்லுள்ளம் எதுவென்று தெரிகின்றது
(2)
நான் அப்போதும்-ஊமை திடம் இல்லாத-கோழை
என்றேனும் ஓர்-நாளில் நான் மாறலாம்

அந்நாளை தினம்-எண்ணி நான் வாழ்கிறேன்
உயிர் வாழ்ந்தாலும் பிணமென்று தான்-வாழ்கிறேன்
(2)
ஐயே-உன் அருளால்-தான் நிஜம் காணலாம்
சொல் எப்போது உன்-தோளில் நான்-சாயலாம்
எந்நாளும் எனை-எண்ணித் தான்-வாழ்கிறேன்
நான்-வாழ இது-போதுமா
என்-பாட்டைத் தான்-எண்ணி நான்-வாழ்கிறேன்
அதில்-என்பாடு தான்-தீருமா






முதல் பக்கம் Part II


Comments