கேளாயோ-நெஞ்சே கேளாயோ தமிழ்வேதம்-தன்னைக் கேளாயோ (2)
புரியாததில்லை எளிதே நீயும் இதைக் கேட்டு மேன்மை காணாயோ
கேளாயோ-நெஞ்சே கேளாயோ தமிழ்வேதம்-தன்னைக் கேளாயோ
(MUSIC)
Kural 38,36
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்
அன்றறிவாம் என்னா..தறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை
பொன்றுங்கால் பொன்றாத் துணை
(MUSIC)
உயிர் தேறுகின்ற-விதமே தினம் அறம்-செய்யுகின்ற மனமே
ஒரு நாளும் இதனை-மறவேல் அறம் பிறர்-வாழ உதவல்-எனவே
அதை-நாளும் சென்று-புரியாயோ உயர்-யோகம் என்று புரியாயோ
அதை-நாளும் சென்று புரியாயோ உயர்-யோகம் என்று புரியாயோ
கேளாயோ-நெஞ்சே கேளாயோ தமிழ்வேதம்-தன்னைக் கேளாயோ
(MUSIC)
Kural 183,184
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
அறங்கூறும் ஆக்கந் தரும்
கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்
புறங்கூறி வாழ்தல் வாழ்வா அதை விட-மேலவ்வறுமைச் சாவாம்
மனம்-கூடிச் சேர்ந்து-மகிழ்வாய் தினம் இதம்-கூறி வாழ்தல் முறையாம்
புறம்-கூறிப் பேசல் முறைதானோ முகம்-நேரில் கூறும்-உரை வீணோ
புறம்-கூறிப் பேசல் முறைதானோ முகம்-நேரில் கூறும்-உரை வீணோ
கேளாயோ-நெஞ்சே கேளாயோ தமிழ்வேதம்-தன்னைக் கேளாயோ
(MUSIC)
Kural 31,32,33சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு
அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு
(MUSIC)
தளராத நேர்மைச் சிறப்பும் கைகள் ஏந்தாத செல்வச் செழிப்பும்
கேளாமல் கிடைக்கும- நிலைக்கும் அறம் தவறாத மாந்தர் தனக்கும்
அறம்-போல நன்மை எதுகூறு அது-போக நேரும் பல-ஊறு
அறம்-போல நன்மை எதுகூறு அது-போக நேரும் பல-ஊறு
கேளாயோ-நெஞ்சே கேளாயோ தமிழ்வேதம்-தன்னைக் கேளாயோ
புரியாததில்லை எளிதே நீயும் இதைக் கேட்டு மேன்மை காணாயோ
கேளாயோ-நெஞ்சே கேளாயோ தமிழ்வேதம்-தன்னைக் கேளாயோ
(MUSIC)
அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழும் இல
அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற ..
குறள் 38: ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.
குறள் 36: இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.
குறள் 183:
புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.
குறள் 184:
எதிரே நின்று கண்ணோட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.
குறள் 31:
அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?
குறள் 31:
ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை
குறள் 39:
அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.
குறள் 35
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.
குறள் 34
ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.
Comments
Post a Comment