ஆ.. ஆ..
கொஞ்ச நேரம் என்னுள் திளைத்தேன் (2)
உடல் இல்லை-என மனம் இல்லை-என (2)
அந்த போதைக் கென்ன ஈடோ
அந்தப் பாதை அன்றி ஏதோ
கொஞ்ச நேரம் என்னுள் திளைத்தேன்
ஆ..
(SHORT MUSIC)
மிச்ச நேரம் மண்ணில் தவித்தேன்
கொடும் செந்தேள் என கொட்டும் பாவம் என்ன
இந்த *பாதை இன்னும் ஏனோ
இந்தப் பாதை நன்மை தானோ
மிச்ச நேரம் மண்ணில் தவித்தேன்
ஆ..
(MUSIC)
(MUSIC)
கண்டேன் என்னுள் நிஜம் பேரொளியாக
(1+ஆ..ஆ..+1)
சென்று-கலந்தேன் நானதுவாக
*1நான்-எனும் கோது சென்றிடும்போது (2)
*2நானினும் தனியென்று *3நான் விளங்காது
மிச்ச நேரம் மண்ணில் தவித்தேன் ..
ஆ..
(MUSIC)
இகழ்தனில் கொதிப்பாக புகழ்தனை மதிப்பாக (2)நினைப்பதை நெஞ்சே-நீ-எந்நாளில் மிதிப்பாயோ (2)
பாரினில் பல-கோரம் ஆசையில் உருவாகும் (2)
தான்-எனும் அஹங்காரம் மேடையில் சதிராடும் (2)
கொஞ்ச நேரம் என்னுள் திளைத்தேன் .. ஆ..
(MUSIC)
ஆநிரை தன்-சேயைக் காண்திறம் தனைப்-போலே
நான்-எனும் நிஜம்-காண வேண்டுதல் தோன்றாமே
மறைத்தது அவன்-மாயை மறந்தது நம்-நோயே (2)
மறந்ததை நினைப்பதே எனக்கினி சரி பாதை
மறந்ததை நினைப்பதே எனக்கினி ஒரு பாதை
ரொம்ப நேரம் என்னுள் திளைப்பேன்
ஒருவேலை-இனி எதும்-இல்லை என
ஒன்றிக் கூர்ந்தே நிஜம் காண்பேன்
என்னில் சேர்ந்தே நிஜம் காண்பேன்
ரொம்ப நேரம் என்னில் திளைப்பேன்
ஆ..
*பாதை =உபாதை
*1நான் எனும் கோது=அஹங்காரம்,
*2நானினும் தனியென்று=நான் எனும் தன்னுணர்வாகிய ப்ரம்மம்(Supra consciousness)
*3நான் விளங்காது=ஜீவாத்மா வின் தான் என்ற உணர்வு தனித்து விளங்காது
அஹங்காரம் அகல ஜீவாத்மாவின் தனியுணர்வு மறைந்து பரமனின் தன்னுணர்வில் கரைகிறது.
Comments
Post a Comment