யார்வேணும் சொல்லித் த..ர யார்வேணும்
தாய்ப்பாலை உண்ணச் சொல்ல யார்வேணும்
(2)
வேறாரும் தேவை இல்லை சொல்வாரும் இங்கே இல்லை
தாய்ப்பாலே கீதையம்மா
யார்வேணும் சொல்லித் த..ர யார்வேணும்
தாய்ப்பாலை உண்ணச் சொல்ல யார்வேணும்
(MUSIC)
என்றுமே வேதம் உண்டு அதனில் தெய்வ ஞானம்-உண்டு
கலியிலே யார்க்கும்-ஓதல் அன்றிப் புரிதல் ஏது என்று
நெஞ்சிலே ஈரம்-கொண்டு பாசம்-கொண்டு பரிவு-கொண்டு
கொஞ்சமும் கடினம் இன்றி தந்தானே கீதை என்று
தேறாயோ நீயே சென்று தேறாயோ
வேறேதும் தேவை இல்லை தேறாயோ
யார்வேணும் சொல்லித்தர யார்வேணும்
தாய்ப்பாலை உண்ணச் சொல்ல யார் வேணும்
(MUSIC)
பச்சை-பிள்ளை தலையில்-குட்டி சொல்லித்-தந்த..தாரம்மா (2)
பருகும்-பாலில் அன்னை-அன்பை உணரச்-செய்ததாரம்மா
புரிய வைத்ததாரம்மா
அண்ணன்-சொல்லில் வாதமில்லை உண்மை-என்று பாரம்மா
சபைதனில் கீதை-தன்னை உரைப்பது வீணாம்மா
அதற்குரை ஏனம்மா
வேறாரும் தேவை இல்லை சொல்வாரும் இங்கே இல்லை
தாய்ப்பாலே கீதையம்மா
யார்வேணும் சொல்லித் தர யார்வேணும்
தாய்ப்பாலை உண்ணச்-சொல்ல யார்வேணும்
(MUSIC)
கைகொண்ட வில்லை-விட்டு வெட்கம்-விட்டு துக்கம்-கொண்டு
மெய் சோர உட்கார்ந்திட்டான் கோழைபோல பார்த்தன் அம்மா
போர்-சென்று செய்யும்போது யார்சொல்லைக் கேட்கும்-காது (2)
அறிவும்-ம..யங்கும்-போது அரிதொன்று அங்கே ஏது
கீதை போல் எளிதும் ஏது
வேறாரும் தேவை இல்லை சொல்வாரும் இங்கே இல்லை
தாய்ப்பாலே கீதையம்மா
யார்வேணும் சொல்லித் தர யார்வேணும்
தாய்ப்பாலை உண்ணச்-சொல்ல யார்வேணும்
வேறாரும் தேவை இல்லை சொல்வாரும் இங்கே இல்லை
தாய்ப்பாலே கீதையம்மா
Comments
Post a Comment