186 எதுவும் கற்பது வீணே(உள்ளம் என்பது ஆமை)



எதுவும் கற்பது-வீணே அதன் படி-வாழ்..விலை-எனும்போதே (2)
கற்றால் கிடைப்பது-பாதி மண்ணில் வாழல் அதன்படி மீதி (2)
எதுவும் கற்பது-வீணே அதன் படி-வாழ்..விலை-எனும்போதே
(MUSIC)
தெய்வம் என்றால்-அது கோவில் தனில்-சிலையாய் இருக்கணும் என்பாய்
(2)
உள்சென்றால் அது-உண்டு இல்லை-என்றால் பெரும்-தொல்லை
நெஞ்சே-உன்னால்-பெரும் தொல்லை
எதுவும் கற்பது-வீணே அதன் படி-வாழ்..விலை-எனும்போதே 
(MUSIC)
*சோறும் சுமையாய்த் தெரியும் அது தோளில் இருக்கும் வரைக்கும் (2)
உண்டிட வயிறில் நிறையும்  ஆனால் உந்தன் பாரமும் குறையும் (2)
அது போலது போலத்தான் இறையும்
துவும் கற்பது-வீணே அதன் படி-வாழ்..விலை-எனும்போதே
கற்றால் கிடைப்பது-பாதி மண்ணில் வாழல் அதன்படி மீதி
எதுவும் கற்பது-வீணே அதன் படி-வாழ்..விலை-எனும்போதே


*சோற்றுமூட்டையின் பாரம், தோளில் சுமக்கும் வரை உன்னை அழுத்தி நடப்பதில் கஷ்டம் கொடுக்கும் .அதே சமயம் அந்த சோற்றை ஆற்றங்கரை ஓரத்தில் ஒரு மர நிழலில் அமர்ந்து ஆனந்தமாகப் புசித்த பிறகு., உன் உடல் வலுப்பெறும் , நடை துரிதப்படும். எடை ஒன்றும் குறையவில்லை. அது (வெளியிலிருந்து) மூட்டையிலிருந்து வயிற்றுக்குள் (உள்ளே) போய் விட்டது. ஆனால் எடையால் இப்போது தடை இல்லை. அது போல , கடவுளை வெளியில் வைத்து அவரைத் தோளில் சுமக்கிற வரையில் உனக்கு பாரம் தான். உள்ளே அவரைக் கண்டு செரித்தால் (செபித்தால்), லேசாகி ஆனந்த வெள்ளத்தில் மிதப்பாய் .



Comments