**The craving for fruit will render all spiritual disciplines fruitless.
_______________
சரிதானா-நீ எண்ணுவது சரிதானா-நீ சொல்லுவது
சரிதானா-நல் சேவையினைப் பலன்-எதிர்பார்த்து-நீ பண்ணுவது
சரிதானா..!
சரிதானே-நான் எண்ணுவது இதுதானே-பிறர் பண்ணுவது
இதைப் போயே-ஓர் குறையெனவே சொல்கிற உன்னை-என்ன பண்ணுவது
சரிதானே
(MUSIC)
புரியலையே-உன் செயல்-தோழி-நீ புரிவதிலே-பலன் இலை-தோழி
(1+SM+1)
பணமோ-காசோ வேண்டி-நீ செய்திடல்
*பூஜையில்லை-கடைத் தொழிலது-தோழி
(1+SM+1)
சரிதானா-நீ எண்ணுவது சரிதானா-நீ சொல்லுவது
சரிதானா-நல் சேவையினைப் பலன்-எதிர்பார்த்து-நீ பண்ணுவது
சரிதானா
(MUSIC)
சேவையைப் பலர்-செய்யப் பார்த்திருக்கேன்
அதில் பெயர்-புகழ் எனப்-பெறக் கேட்டிருக்கேன்
(1+SM+1+SM)
இது-தான் உயர்வென அறிந்திடுவேன்-
அதனால்-அதைப் பலன் பெறப் புரிந்திடுவேன்
சரிதானே-நான் எண்ணுவது இதுதானே-பிறர் பண்ணுவது
இதைப் போயே-ஓர் குறையெனவே சொல்கிற உன்னை-என்ன பண்ணுவது
சரிதானே
சரிதான் போ..
*கடைத் தொழில்= 1) Business, 2) ஞான ஏணியில் கடை நிலையில் இருக்கும் மாந்தர்கள் செய்யும் தொழில்
Comments
Post a Comment