புத்தி முட்டும்-கடா மெய் வெத்து-மொடா (2)
கத்திக் கொல்லுமடா நெஞ்சை எண்ணம் விடா (2)
*நாலும்-கடந்து குடித்த-பின்னால் நல்லது-கிட்டக்கத் தோணுமடா
புத்தி முட்டும்-கடா மெய் வெத்து-மொடா
கத்திக் கொல்லுமடா நெஞ்சை எண்ணம் விடா (2)
(MUSIC)
ஆதி பகவான் பேரை-உரைக்கப் பாவம் உன்னைத்-தொடா
**நேதி என-நீ அதையும்-விலக்க இருமை என்றும்-இரா
(2)
இருமை-போக விரைவில்-போக எண்ணம் இடம் தரா (2)
எண்ணம்-போக உதயமாகும் இன்பம் என்றும்-விடா
(SM)
புத்தி முட்டும்-கடா மெய் வெத்து-மொடா
கத்திக் கொல்லுமடா நெஞ்சை எண்ணம் விடா (2)
(MUSIC)
***போதும்-போதும் என்று-நெஞ்சம் சலித்துக் கொள்ளுமடா
திரும்ப-வெளி இன்பம்-நாடி ஓடிச் செல்லுமடா
கடினம்-அந்த மனமடங்கல் மிகக்-கடினமடா (2)
தினம்-வேண்டி வேண்டிச் சொன்னபின்னும் எண்ணம் மட்டுப்படா
புத்தி முட்டும்-கடா மெய் வெத்து-மொடா
கத்திக் கொல்லுமடா நெஞ்சை எண்ணம் விடா (2)
(MUSIC)
கரும்பு-கூட நுனியில்-இனிப்பு குறைந்திருக்குமடா
அதன் அடியில்-கொஞ்சம் ருசித்துப்-பார்க்க இனித்திருக்குமடா
யோகம் கூட முதலில்-கொஞ்சம் கசந்திருக்குமடா
நீ அதனில்-மூழ்கி முனைந்து-பழக இனிப்பு எழுமடா இறப்புக்கென்றே பிறப்பதிலே என்ன இன்பமடா (2)
பிறந்த-அன்றே இறக்கும்-தேதி வந்து-விட்டதடா
புத்தி முட்டும்-கடா மெய் வெத்து-மொடா
கத்திக் கொல்லுமடா நெஞ்சை எண்ணம் விடா (2)
*நாலும் கடந்து குடித்த பின்னால் =
1) வேதம் கடந்து விளங்கும் வேதாந்த சாரத்தைக் குடித்த பின்னால்
2) வேத சாரமான ,ப்ரம்ம சூத்திரம்,பகவத் கீதை,உபநிஷதங்கள் ஆகிய நான்கின் சாரத்தை உணர்ந்த பின்னால்
*நல்லது கிட்டக்கத் தோணுமடா = ப்ரம்மம் அருகே தோன்றும்
***Neti neti, meaning, "Not this, not this", is the method of Vedic analysis of negation. It is a keynote of Vedic inquiry. With its aid the Jnani negates identification with all things of this world which is not the Atman, in this way he negates the Anatman. Through this gradual process he negates the mind and transcends all worldly experiences that are negated till nothing remains but the Self. He attains union with the Absolute by denying the body, name, form, intellect, senses and all limiting adjuncts and discovers what remains, the true "I" alone.
**முதலில் பகவானின் நாம ரூபங்களைப் பிடித்துக் கொண்டு , பிறகு அதையும் கடந்தால் உண்மை உணர்வில் ஒன்றால் நிகழும். இதைத்தான் கீழ்கண்ட குறள் சொல்கிறது
"பற்றுக பற்றற்றான் பற்றினைப் பற்றுக அப்பற்று விடற்க"
***Release from bondage to inborn impulses is the Real Liberation
Comments
Post a Comment