181. இசை பாட்டால்(இசை கேட்டால் புவி அசைந்தாடும்) *


ஆ.. ஆ..
இசைப்-பாட்டால்-விதி வழி-மாறும் எனும் மொழி-மெய்ப்–பொருளாகும்
(1+SM+1)
*நாலாம் மறையும் *மேலோன் பதிகம்
*சொல்லு-மெய்ப் பொருளாகும் இசை-ஆண்டவன் உருவாகும்
இசை-மானிடர் உய்வாகும்
இசைப்-பாட்டால்-விதி வழி-மாறும் எனும் மொழி-மெய்ப்–பொருளாகும்
(MUSIC)
என் பாடல் சேய்-போலப் பிதற்றாகலாம்
என் தேடல் அதனாலே *வெளித்-தோன்றலாம்
(2)
*ஒரு-மேன்மை புரியாமல் நான்-பாடலா...ம்
இசை ஞானம் இல்லாமல் நான்-பாடலாம்
என்றாலும் இசைப்பாட்டில் நான் தேடுவேன்
என்றாகி..லும்-மெய்யை நான் காணவே
என்றாம்-கடலின் அலையும்-ஓயும் அன்றைக்கு நீராடல்
என நின்றிடல் வீணாகும் கண் கெட்டபின் தொழல்-போலும்  
(MUSIC)
சதிராடும் விதி-தந்த மோகங்களே
 எதிர்கொள்ள மதி-என்னில் ஏதுங்களே
*நிஜம்-தூங்கி நாளும்-சென்..றாச்சுங்களே ...
(Small THAALAM)
நிஜம்-தூங்கி நாளும்-சென்..றாச்சுங்களே
தினம் சேரல் என்றாச்சு பாவங்களே (2)
(SM)
கத்தும் மன-அலை ஓடி-ஓடி வரும் என்னைத் துணியெனத் துவைத்து எடுக்குமதைப் பாருங்களேன்
(VSM)
என்றும் இசையுடன் பாடல் செய்தல்-விட நன்றாம்-பிறவழி என்ன செய்யவெனக் கூறுங்களேன்
(VSM)
என்னில் மனம்-விழத் தேற வேண்டும்-என இன்னும் பெரிதென என்ன செய்வதெனக் கூறுங்களேன் ..... கூறுங்களேன்
வாருங்களேன் கூறுங்களேன்
(MUSIC)
இசைப்-பாட்டால்-விதி வழி-மாறும் எனும் மொழி-மெய்ப்–பொருளாகும்




*மேலோன் பதிகம்  =ப்ரம்ம சூத்திரம்.நூலில் பதிந்துள்ள பொருளைக் கூறுவது பதிகம். நாலாம் மறையும் மேலாம் பதிகம் இறைவனில் இறைவனாய் பொதிந்துள்ள பொருளைக் கூறுவது மேலோன் பதிகம்( ப்ரம்ம சூத்திரம்)
*சொல்லு = வினைத்தொகை ; 
சொல்லிய, சொல்லிக்கொண்டிருக்கிற , சொல்லப்போகும் என்று காலம் கடந்த


*என் பாடல் சேய்-போலப் பிதற்றாகலாம் என் தேடல் அதனாலே *வெளித்-தோன்றலாம்  
 முதிராத அறிவாலே என் பாடல் குழந்தையினது போலத் தோன்றலாம்.அதனாலேயே அது வெளிப் பகட்டாகவும் தோன்றலாம்.( ஆனால் அப்படி இல்லை)

*ஒரு மேன்மை புரியாமல்=1.எந்த ஒரு உயரிய மேன்மை தரக்கூடிய யோகம் யாகம் போன்ற செயல்களைப் புரியாமல் (செய்யாமல்/ புரிந்து கொள்ளாமல்)
 2. ஒன்று என்றாகிய நன்றின் மேன்மையைப் புரிந்து கொள்ளாமல்


*நிஜம்-தூங்கி= அறியாமை கொண்டு



Comments