175 வேறெங்கு நானின்னும் தேடணும்(ஊரெங்கும் மாவிலைத் தோரணம்)

வேறெங்கு நானின்னும் தேடணும் ஆண்டவன் தான்-இனிப் பார்க்கணும்

வேறெங்கு நானின்னும் தேடணும் ஆண்டவன் தான்-இனிப் பார்க்கணும்
ஒரு-நாள் தேடப் பலநாள் எந்தன் வாழ்நாள் தான்  போதாதோ
(1+SM+1)+ (MUSIC)
இறை-தன் பாட்டில் ஒளிர்கின்ற ஞானம்
அவனுக்கு யார் ஏன் சொல் வேண்டும் 
தன்-பெரும் கடமை என-எனைப் பார்த்து
அவனே தானே வல்-வேண்டும்
(2)
படை-என்னை-என்று குரல்-தந்து-நானும்
அழவில்லை என்றும் மறவாதே
வெறும் அம்பு என்னை எய்தானே
வேறெங்கு நானின்னும் தேடணும் ஆண்டவன் தான்-இனிப் பார்க்கணும்
ஒரு-நாள் தேடப் பலநாள் எந்தன் வாழ்நாள் தான்  போதாதோ
(MUSIC)
நமக்கொரு உலகைப் படைத்ததில் வைத்தான்
ஒழுங்காய் இருப்பாய் எனக்கூறி
பின் அதை மறந்தே படுக்கையை அமைத்தே
கடலினில் படுத்தான் அவன் பாட்டில்
(SM)
நமக்கொரு உலகைப் படைத்ததில் வைத்தான்
ஒழுங்காய் இருப்பாய் எனக்கூறி
பின் தனை மறந்தே படுக்கையை அமைத்தே
கடலினில் படுத்தான் அவன் பாட்டில்
உலகோரில் யாரும் படைப்பாயே-என்று துதி பாடவில்லை மறவாதே
பழி ஒன்றும் இல்லை என் மேலே
வேறெங்கு நானின்னும் தேடணும் ஆண்டவன் தான்-இனிப் பார்க்கணும்

ஒரு-நாள் தேடப் பலநாள் எந்தன் வாழ்நாள் தான் போதாதோ

Comments