174 நாம் கற்றுச் சொல்வோம் (பொன்னொன்று கண்டேன்)




நாம் கற்றுச் சொல்வோம் வா கற்றுக் கொள்வோம்
நன்றொன்று கற்றல்-மேல் ஏதம்மா 
நாமென்றும் கற்றால் தான் வீடம்மா
(SM)
பூ வந்து வாழ்ந்தேன் இதம் காணவில்லை
ஏனென்று நான் சொல்லலாகுமா
ஏனென்று நான் சொல்ல வேணுமா
(MUSIC)
*அடங்காத தேகம் எனதென்ற வீரம்
அஹங்காரச் சின்னம் அதைப் போக்க வேணும்
**உடனாடும் செல்வம் இனி-தேட வேண்டும்
நமைக்-காண வேணும் உயிர்-போகு முன்னம்
பள்ளிகளும் … சொல்லித் தரா
பள்ளிகளும் சொல்லித் தரா
நிகண்டுகளில் … எழுதி இரா
நிகண்டுகளில் எழுதி இரா
மெய்ஞ்ஞானப் பொருள்-யாவும் கொள்கின்ற வழி என்னவோ
என்றே .. ஆமாம்
இங்கே .. ஆமாம்
வந்தோம்
நாம் கற்றுச் சொல்வோம் வா கற்றுக் கொள்வோம்
நன்றொன்று கற்றல்-மேல் ஏதம்மா 
நாமென்றும் கற்றால் தான் வீடம்மா
(MUSIC)
நான் கற்..ற ஒன்றை நீ கற்..கவில்லை
நீ கற்..ற பலதை நான் கற்கவில்லை (2)
உன்-பாதை வேறே என்-பாதை வேறே
என்றாலும்-ஒன்றே நாம்-செல்லும் ஊரே (2)
நம்வழியில் பார்த்ததெல்லாம் (2)
நம்மிடையில் நாமுரைப்போம் (2)
ஈதன்றி வேறில்லை நாம்-கற்று தான்-உய்யவே
என்றே .. ஆமாம்
இங்கே .. ஆமாம்
வந்தோம்
நாம் கற்றுச்-சொல்வோம் வா கற்றுக் கொள்வோம்
நன்றொன்று கற்றல்-மேல் ஏதம்மா 
நாமென்றும் கற்றால்-தான் வீடம்மா
பூ வந்து வாழ்ந்தேன் இதம் காணவில்லை
ஏனென்று நான் சொல்லலாகுமா
ஏனென்று நான் சொல்ல வேணுமா


* அடங்காத தேகம் எனதென்ற வீரம் = யவ்வன கர்வம்
மா-குரு தன-ஜன யவ்வன கர்வம்(பஜ கோவிந்தம்)=Boasting of wealth, friends, and youth.
**உடனாடும் செல்வம்=ஆன்மா





முதல் பக்கம் Part II




Comments