172 உன்னைத்தான் நானடைவேன் (உன்னைத்தான் நானறிவேன்)

உன்னைத்தான் நானடைவேன் உன்னிடத்தில் தானழுவேன்

உன்னைத்தான் நானடைவேன் உன்னிடத்தில் தானழுவேன் 
என் உண்மை-எனும் பேரறிவை உன்னைக் கண்டு தானடைவேன்
(2)
உன்னைத்தான் நானடைவேன் உன்னிடத்தில் தானழுவேன்
(MUSIC)
யாரிடத்தும் லோகப்-பொய்யே யார்-சொல்லித் தந்தார் மெய்யே (2)
ஸ்வாமியுந்தன் மொழி-வழியே பார்-நடக்கத் தோன்றும் மெய்யே (2)
*ஓன்று-நீ உரைத்ததய்யே நன்றாகக் காட்டும் மெய்யே
உன்னைத்தான் நானடைவேன் உன்னிடத்தில் தானழுவேன்
(MUSIC)
பேதலித்தல் கேடு-நண்பா என்று-நீ சொன்னதன்றோ (2)
கண்ணனாய் வந்து-நன்றாய் அன்று-நீ சொன்னதன்றோ (2)
**கீதை-பார்த்தனுக்கு என்றால் எந்தனுக்கு வேறேதோ
உன்னைத்தான் நானடைவேன் உன்னிடத்தில் தானழுவேன்
என் உண்மை-எனும் பேரறிவை உன்னைக் கண்டு தானடைவேன்
உன்னைத்தான் நானடைவேன் உன்னிடத்தில் தானழுவேன்

*ஓன்று-நீ=ஒன்றானவனான நீ ; நீ உரைத்த ஒன்றே; உன் ஒரு சொல்லே
இறைவன் ஒரு சொல்லாலேயே இந்த ப்ரபஞ்சத்தைப் படைத்தான். இந்த ப்ரபஞ்சம் இறைவனின் மெய்யாக (உடம்பாகக்) கருதப்படுகிறது (புருஷ ஸுக்தம்)
**பார்த்தனுக்கு கீதை என்றால் = கீதை என்பது பார்த்தனுக்கு மட்டும் உரைத்ததாக எண்ணும் அறியாமை

Comments