*நான் என்னும் மண்டு ஞானமதைக் கொண்டு
என்று-உண்மை காணுவதோ வா வந்து-சொல்லு
நானறியேன் நீ சொல்லுவாய்..
ஓ .. நானறியேன் நீ சொல்லுவாய்
(MUSIC)
யோகம்-சொல்லும் த்யானம் புரிந்திடும்-நிதானம்
மனமாடும் விதம் கூறவே
பூமியிலே இந்த பூமியிலே
பூமியிலே யாரிருக்கார் ஆண்டவனே கூறாய்
உண்மை இது-தானல்லவோ ...ஓ..உண்மை இது-தானல்லவோ
(MUSIC)
வீண் உலகில் ஆடி நிம்மதியும்-சென்று நானலைந்தே வாடுவதில்
ஆனந்தம் உண்டோ சொல்வாயே என் ஆண்டவா
...ஓ.. சொல்வாயே என் ஆண்டவா
(MUSIC)
ஞானமதைக் கொண்டு நானுமுனைக் கண்டு
**நிஜம்-சேரும் நிழல் போலவே
கலந்திடவே … நானும் கலந்திடவே
ஏங்குகிறேன் உண்மை-உனை அந்நியமாய்க் காணும்
அறியாமையும்-ஏன் வாழ்விலே ஓ.. அறியாமையும்-ஏன் வாழ்விலே
(VSM)
நானும்-கண்டு களிக்காமல் வாழ்வதும் ஏனோ
ஆண்டவனே நீ சொல்லுவாய் ஓ .. ஆண்டவனே நீ சொல்லுவாய்
ஓ ..* எல்லாம் புரிவது நான் என்று எண்ணும் அறியாமை
**திருமூலர் திருமந்திரம்
எண்ணாயிரத்து ஆண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதினைக் கண்டறிவார் இல்லை
உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கினால்
கண்ணாடி போலக் கலந்து நின்றானே.
கண்ணார் அமுதினைக் கண்டறிவார் இல்லை
உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கினால்
கண்ணாடி போலக் கலந்து நின்றானே.
எண்ணாயிரம் ஆண்டுக் காலம் தவயோகம் புரிந்தாலும், கண் போன்றவனை, உண்ணத் தெவிட்டாத அமுதினைப் போன்றவனைக் கண்கொண்டு கண்டறிந்தவர்கள் யாரும் இல்லை. ஆனால், உள்நாடி உள்ளே - சுழுமுனை நாடி உள்ளே ஒளிவடிவாக இருப்பவனை, அகக்கண் கொண்டு பார்த்தால், அப்பரம் பொருள்; கண்ணாடி போல - கண்ணாடியில் காண்பதைப் போல, கண்ணாடி ஒளிபோல, கலந்து நின்றானே - கண்ணுக்குள் காணக் கலந்து நிற்பான்.நிழல் நிஜத்தோடு சேர்வது உண்மை ஞானம் ஒன்றாலே
Comments
Post a Comment