வா-வா-வா மேதினியில் தோன்றத் தயக்கமா- அட
உன்-பாரில் பிறந்து-வர உனக்கும் கலக்கமா
வா-வா-வா மேதினியில் தோன்றத் தயக்கமா
தாலாட்டும் பாற்கடலில் தூங்கியதாலோ
இனி-போதும் என்றுலகம் தோன்றியதாலோ
வா-வா-வா மேதினியில் தோன்றத் தயக்கமா
(MUSIC)
சாவென்ற கோராமை உனக்கு இல்லையா சாதல்
நானென்றும் கோராமல் எனக்கு ஏனய்யா
(2)
சொல்லொன்று சொல்லாமல் தூக்கமேனய்யா என்றும்
சுகமாக அழகாக உறக்கம் தேவையா
வா-வா-வா மேதினியில் தோன்றத் தயக்கமா- அட
உன்-பாரில் பிறந்து-வர உனக்கும் கலக்கமா
(MUSIC)
சென்று-வந்து நானுலகில் வாட-வேண்டுமா நீ
மட்டும்-நன்றாய் பாற்கடலில் தூங்க-வேண்டுமா
(2)
எங்கணுமே உன்-நடத்தை ந்யாயமில்லையே
எப்பொழுதும் நானழுதும் பலனுமில்லையே
வா-வா-வா மேதினியில் தோன்றத் தயக்கமா- அட
உன்-பாரில் பிறந்து-வர உனக்கும் கலக்கமா
(MUSIC)
இன்றே-நான் யோகமெல்லாம் புரியக் கொண்டாலும் ஓர்
இரவினிலே முதிர்ச்சியை-நான் அடைந்து-விட்டாலும்
தந்தையே-உன் கடைவிழியின் பார்வையில்லாமல் நான்
மறுபடியும் பிறந்திறந்து பாரில் வாடுவேன்
வா-வா-வா மேதினியில் தோன்றத் தயக்கமா- அட
உன்-பாரில் பிறந்து-வர உனக்கும் கலக்கமா
வா-வா-வா மேதினியில் தோன்றத் தயக்கமா..முதல் பக்கம் Part II
Comments
Post a Comment