எண்ணிலா சுகம் சென்று-தேடிடும்
எந்தன் *மன்மனம் என்று-நின்றிடும்
எந்தன் *மன்மனம் என்று-நின்றிடும்
(1+SM+1)
மண்ணிலோர்-சுகம் தேடுதே-நிதம் (2)
பொல்லாத மனமல்லவோ (2)
எண்ணிலா சுகம் சென்று-தேடிடும்
எந்தன் மன்மனம் என்று-நின்றிடும்
எந்தன் மன்மனம் என்று-நின்றிடும்
(MUSIC)
ஆழ்-துயில் எதுவரை ஆசைகள் எதுவரை
(2)
(2)
பூமியில் வீழ் சுழல்-தானோ
ஐயே விழுமிய-உன்னுடன் ஒன்றென-நன்றென
நானிரும் நாளெந்த-நாளோ ..
நானிரும் நாளெந்த நாளோ
நானிரும் நாளெந்த நாளோ
***ஆண்டவன்-மடி தாயினும் மடி
என்பதன்-படி கொஞ்சுவாயினி
என்பதன்-படி கொஞ்சுவாயினி
எண்ணிலா சுகம் சென்று-தேடிடும்
எந்தன் மன்மனம் என்று-நின்றிடும்
எந்தன் மன்மனம் என்று-நின்றிடும்
(MUSIC)
என்-தளை அறுந்திட நான்-உன்னில் கலந்திட
(2)
(2)
மெய்வழி திறந்திடுவாயோ
இன்றே நானகம் புகுகையில் ஞானத்தின் எழுகையை
த்யானத்தில் வழங்கிடுவாயோ த்யானத்தில் எழுந்திடுவாயோ
என்று-என்குரல் அம்பலன்-குழல் காதினில்-விழும் என்றுதான் அழும்
எண்ணிலா-சுகம் சென்று-தேடிடும் எந்தன் மன்மனம் என்று-நின்றிடும் (2)*மன்மனம்=மன்னும் மனம்=(என்றும் ஆசையிலேயே) பொருந்தும் மனம்;
மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை
மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு
மன்மனத் துள்ளே மனோலய மாமே
* புறப் பொருளிடத்தும், ஆன்மாவிடத்தும் நிற்கின்ற மனம் எப்பொழுது உண்டோ, அப்பொழுதெல்லாம் பிராண வாயுவின் இயக்கமும் உளதாகும்; அத்தன்மையான மனம் இல்லாத பொழுது, பிராணவாயுவின் இயக்கமும் இல்லையாம். மேற்கூறிய இரண்டையும் விடுத்து தியானிக்கப்படும் பொருளில்) நிலை பெற்ற மனத்தால் அல்லல் அற்று இன்புற்றிருப்பவர்க்கு, அத் தியானப் பொருளிடத்தே அவரது மனம் ஒடுங்கி நிற்கும்.
மனமும் உயிரும் ஒன்றுக்கொன்று சார்புடையவை. உயிர் இல்லையேல் மனம் இல்லை மனம் இல்லையேல் உயிர் இல்லை ( பிறப்பில்லை, எனவே இறப்பில்லை).மெய்ப்பொருள் உணர்விலே ஆழ்ந்து எண்ணங்கள் அகலப் பின் கிட்டும் சர்வ சத்ய சாக்ஷத்காரத்தினால் என்றும் ஆனந்த லயமே, ஆனந்த மயமே..!
**விழுமிய =செழித்த , வளமான,உயர்ந்த
*** ஆண்டவனின், பக்தர்கள் புக வல்ல, இனிய மடி , தாயின் மடியை விடச் சிறந்ததானத் தூய்மையும் களங்கமற்ற தன்மையையும் உடையது.
Comments
Post a Comment