இரவு-பகல் பூஜை-செய்து என்ன-கேட்பது பொன்னா-பூமியா
யாவும் சிமிட்டும்-கணத்தில் போகும்-ஐயா எல்லாம்-போகுமே
இதையா கேட்பது உனை என்ன என்பது
(MUSIC)
உயர்ந்த-பொருளை அடையவேண்டும் என்ற-உந்தன் தவிப்பும்
அதை அடையப்-புரியும் சாதனை-தான் பூஜை-என்ற நினைப்பும்
(2)
கொண்டார்-பால் *இல்லான்-தாள் அருளாதோ-சென்று
சோகம்-பின்னர் அவருக்கில்லை என்றே-சொன்னது
அது அன்றே-சொன்னது **குறள் நன்றே சொன்னது
இரவு-பகல் பூஜை-செய்து என்ன-கேட்பது பொன்னா பூமியா
யாவும் சிமிட்டும்-கணத்தில் போகும்-ஐயா எல்லாம்-போகுமே
இதையா கேட்பது உனை என்ன என்பது
(MUSIC)
அன்பினோடு உன்-கரங்கள் கருமம்-செய்ய வேண்டும்
அது ***தன்னை-எண்ணி..டாதிருந்தால் தருமம்-என்று ஆகும்
இதன்-மேலே உயர்-வேதம் வேறென்ன வேண்டும்
நால்வேதம் இதைத்-தானே எடுத்துச் சொல்லுது
முதல் கருமம் தானது பின் தர்மம் ஆகுது
(MUSIC)
நீயும்-நானும் தேடுகின்றோம் வெளியில்-செல்வம் வீணே
அச்-செல்வம்-நம்மில் இருக்குதென்ற அறிவு-சென்றதாலே
உன்னுள்ளும் உன்-தெய்வம் கோயில் கொள்ளும் போது
இல்லாதான் போல்-நீயும் செல்வது போதும்
இது கடவுள்-சொன்னது இதில் சத்யம்-உள்ளது
இரவு-பகல் பூஜை-செய்து என்ன-கேட்பது பொன்னா பூமியா
யாவும் சிமிட்டும்-கணத்தில் போகும்-ஐயா எல்லாம்-போகுமே
இதையா கேட்பது உனை என்ன என்பது
*இல்லான்=வேண்டுதல் வேண்டாமை இலான், நிர்குண பரப்ரம்மம்
**வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தாற்கு யாண்டும் இடும்பை இலை
*** தன்னை-எண்ணி..டாதிருந்தால் =தான் என்ற எண்ணம் இல்லாமல்,தன்னலம் கருதாமல் (Help ever Hurt never; Hands that help is holier than the lips that pray)
Comments
Post a Comment