இரவு-பகல் உலகில்-திரிந்து அறிவு-சொல்கிறாய் இதுதான்-யோக்யமா
உன் உரைப்படி-நீ நடந்து கொண்டால் அதான் யோக்யமே
தருமம் சொல்லுது அதில் சத்யம் உள்ளது
(MUSIC)
உயர்ந்த அறிவு அடைந்ததாக உனக்கு உண்டு நினைப்பு
அதை உனது-வாழ்வில் கடைபிடித்தால் உனக்குக்-கூடும் மதிப்பு
(2)
மட-நெஞ்சே நீ-நின்றே அமைவாயே இன்றே
ஞாயம் என்ன உலகினுக்கு நீயும் சொல்வது
இது சாத்தான் ஓதிடும் புது வேதம் போன்றது
இரவு-பகல் உலகில்-திரிந்து அறிவு-சொல்கிறாய் இதுதான்-யோக்யமா
உன் உரைப்படி-நீ நடந்து கொண்டால் அதான் யோக்யமே
தருமம் சொல்லுது அதில் சத்யம் உள்ளது
(MUSIC)
*மண்டி-போட்டு வணங்கும்-போது உனது-கர்வம் அடங்கும்
அந்த கணத்தில்-பொய்மை அடங்கி-நன்றாய் உண்மை-ஒன்று தோன்றும்
**உன்போலே பிற பேரை நினைப்பாயே என்று
உயர்ந்தோனின் அவதாரம் ஏசு சொன்னது
அது ஏசு சொன்னது அது மாசைப் போக்குது
(MUSIC)
நீயும்-நானும் இறைவன்-ரூபம் என்ற-ஒன்று தானே
நான் அதை அறிவேன் நீ அறியாய் என்னும் கண்ணன் கீதை
உயர்-வேதம் இதைக்-கேட்டும் போதும்-என்னும் வாது
என்றானால் உன்-வாழ்வில் நிம்மதி-ஏது
இது கீதை சொன்னது இதில் சத்யம் உள்ளது
இரவு-பகல் உலகில்-திரிந்து அறிவு-சொல்கிறாய் இதுதான்-யோக்யமா
உன் உரைப்படி-நீ நடந்து கொண்டால் அதான் யோக்யமே
தருமம் சொல்லுது அதில் சத்யம் உள்ளது
*மண்டி-போட்டு வணங்கும்-போது=இஸ்லாமியத் தொழுகை
** Do unto others as you would have them do unto you **வாது=வாதம்
Comments
Post a Comment