161 எண்ணம் ஒழிந்தால்(கண்ணன் பிறந்தான்)



Click here for the Audio


எண்ணம்-ஒழிந்தால் உந்தன் எண்ணம்-ஒழிந்தால்
புது-உணர்வினை அடைந்திடலாம்
பின்னம்-ஒழிந்தால் உந்தன் பின்னம்-ஒழிந்தால்
அந்த முழுமையைக்-கலந்திடலாம்
(1+SM+1) +(MUSIC)
எண்ணம் ஒளியோ-அது தொல்லை வழியோ
#எண்ண-கனம்-போய் நெஞ்சம் சன்னம்-தொடுமோ
 (1+SM+1)
செத்துப்-பிறப்போ புது மெய்யில்-நடிப்போ
நித்தம் கத்தும்-மனமோ-அதில் எண்ணம்-குரலோ
(1+ஓ..+1)
எண்ணம் கொடுந்தேள்-நான் என்னும்-ஒரு பேய்
கொண்டு மண்ணில்-பிறந்தேன் அதன் கண்ணே அமிழ்ந்தேன்
எண்ணம்-ஒழிந்தால் உந்தன் எண்ணம்-ஒழிந்தால்
புது-உணர்வினை அடைந்திடலாம்
பின்னம்-ஒழிந்தால் உந்தன் பின்னம்-ஒழிந்தால்
அந்த முழுமையைக்-கலந்திடலாம்
 (MUSIC)
*தெய்வம் இருக்கோ-அதன் கண்கள் இருக்கோ
என்ன நினைத்தோ-அதன் இந்தப் படைப்போ
(1+SM+1)
**திட்டக் குறையோ இல்லை கெட்ட குறையோ-இது
என்ன முறையோ-புது எண்ணச் சிறையோ
(2)
***கண்ணை இழந்தேன் அதில் என்னை இழந்தேன்-
பிள்ளை நெஞ்சை இழந்தேன் அதில் நோவை அடைந்தேன்
எண்ணம்-ஒழிந்தால் உந்தன் எண்ணம்-ஒழிந்தால்
புது-உணர்வினை அடைந்திடலாம்
பின்னம்-ஒழிந்தால் உந்தன் பின்னம்-ஒழிந்தால்
அந்த முழுமையைக்-கலந்திடலாம்
 (MUSIC)
ஆஆ..
## மெய்யை-நினைப்பேன் நெஞ்சில் பொய்யை-முடிப்பேன்
எண்ணம்-விடுப்பேன் கதை தன்னை-முடிப்பேன் (2)
பாதை-கொடுத்தான்-அந்த கண்ணன்-சிறப்பாய்-அந்த
கீதை படிப்பேன்-அதைக் கொண்டு-பிழைப்பேன்
அதைக் கொண்டு-பிழைப்பேன்
மெய்யை நினைப்பேன்-அந்த மெய்யை அடைவேன்
உண்மை அன்பைக் குடித்தேன் அந்த அன்பை அடைவேன்
எண்ணம்-ஒழிந்தால் உந்தன் எண்ணம்-ஒழிந்தால்
புது-உணர்வினை அடைந்திடலாம்
பின்னம்-ஒழிந்தால் உந்தன் பின்னம்-ஒழிந்தால்
அந்த முழுமையைக்-கலந்திடலாம்

#எண்ண-கனம்-போய் நெஞ்சம் சன்னம்-தொடுமோ=எண்ணங்களற்றவுடன் தன்னுணர்வு , பஞ்ச கோசங்களில் கடைசியான ,மிகச் சன்னமான (Subtlest) ஆனந்த மய கோசத்தில் நிலைக்குமோ.
பஞ்ச கோசங்கள் = அன்ன மய கோசம் ,ப்ராண மய கோசம், மனோ மய கோசம் ,விக்ஞான மய கோசம், ஆனந்த மய கோசம் (Each sheath is subtler than the previous; Aanandha maya kosam being the subtlest of all)

*தெய்வத்துக்குக் கண்ணில்லையோ அது என்ன நினைத்து மனத்தைப் படைத்தது
** மனம் என்ற ஒன்றன் படைப்பு இறைவனது திட்டமிடுதலின் குறையோ ; இல்லை, பல அவதாரங்கள் மனதுடைய மனிதனாக அவதாரம் எடுத்ததனால் ,கடவுளே கெட்டுப் போய் விட்ட குறையோ அதில் எழும் எண்ணங்களால் என்னைச் சிறைப் படுத்தி கஷ்டப்படுத்துகிறானே..அந்தோ..!
***மனம் என்ற ஒன்றினால் முதலில் கண்ணை இழந்தேன் (ஆசையினால்) , அதில் என்னை இழந்தேன் , பிறகு பிள்ளையாய் வெண் நெஞ்சுடன் பிறந்த நான் அதனை (INNOCENCE) இழந் து பின் கறை பட்ட நெஞ்சினால் அதில் கணமும் நோவே அடைந்தேன்.


##- The (only) path for redemption.



முதல் பக்கம் Part II


Comments