160 உன் மீதிலே ஆயிரம் பா(தண்ணீரிலே தாமரைப் பூ)



Click here for the Audio


உன்-மீதிலே ஆயிரம்-பா நான்-பாடினேன் முடியலையே (2)
தத்தளிக்கும்-எனையே கொந்தளிக்கும் மனதே -
விட்டு-விடு என்றால் முடியாதோ விடுதலை-எனக்கினி கிடையாதோ
முடிவு-ஒன்று வருவதற்குள் அதை-நான் உன்னிடம் பெறுவேனோ
உன்-மீதிலே ஆயிரம்-பா நான்-பாடினேன் முடியலையே
(MUSIC)
பழகிய-என்னிடம் கருணை-இல்லை
அடக்கிட-என்னிடம் திறமுமில்லை திறமுமில்லை திறமுமில்லை
 கணமும் உன் அலை ஓய்வதில்லை ஓய்வது போலொன்றும் தோணவில்லை.. தோணவில்லை.. தோணவில்லை
அட நீயும்-ஓய்வது போல இல்லை
 உன்-மீதிலே ஆயிரம்-பா நான்-பாடினேன் முடியலையே
(MUSIC)
இறைவன் உனக்குள் கோயில் கொண்டு
இருக்கணும் எனும்-உயர் எண்ணம் கொண்டு
(2)
**மனம்-கணம் இருப்பது போல்-கணக்கு போடுதல்-தானா என்-பிணக்கு (2)
**மனதறப் போமா ? என்றெனக்கு
உன்-மீதிலே ஆயிரம்-பா நான்-பாடினேன் முடியலையே




**மனம்-கணம் இருப்பது போல்=இறைவனை உள்ளே கோயில் கொண்டிருக்கும்படிச் செய்யவேண்டும் என்று மனம் கணமேனும் எண்ணும் என்று நான் நினைப்பது-தான் என் பிணக்கோ ?

*மனதறப் போமா ? என்றெனக்கு=மனது அறவே போகுமா ? என்று போகும் ?

முதல் பக்கம் Part II


Comments