159.சாகாமல் பூமியிலே(ஆகாயப் பந்தலிலே)



சாகாமல் பூமியிலே வாழ்வென்பதேது அம்மா
(SM)
சாகாமல் பூமியிலே வாழ்வென்ப..தேது அம்மா
பூலோகம் வாழ்வாம்மா தோற்றம் அங்கே சாவு-அம்மா
பூலோகம் வாழ்வாம்மா ஜனனம் அங்கே சாவுக்கம்மா
சாகாமல் பூமியிலே வாழ்வென்ப..தேது அம்மா
(MUSIC).. ஓ ..
ஊர்-கூடி அதில்-பத்து பேர்-கூவி சிலர்-வாயில் சங்கூத
நாம்-செல்லல் வாழ்வாம்மா
(sm)
மேலோனில் சங்கமித்து 
(sm)
மேலோனில் சங்கமித்துநாம்-வாழ்தல் வாழ்க்கையம்மா
*நானோட நீராக ஒன்றல்-ஒன்றே வாழ்வம்மா
சாகாமல் பூமியிலே வாழ்வென்பதேது அம்மா
பூலோகம் வாழ்வாம்மா தோற்றம் அங்கே சாவு அம்மா
(MUSIC)
கால்வண்ணம் அவன்-கையின் வில்வண்ணம்
எனக்-கம்பன் பா-சொன்ன ஸ்ரீராமன் காண்போமா
(SM)
**கூறாத நிம்மதியில் ஒன்றாக வேண்டுமம்மா
***தாயொன்றும் சேயென்றே இன்றே-அங்கே சேர்வோமா
(both)
சாகாமல் பூமியிலே வாழ்வென்பதேது அம்மா
பூலோகம் வாழ்வாம்மா தோற்றம் அங்கே சாவு அம்மா
ஆ ..ஆ

*நானோட நீராக ஒன்றல்=நான் என்னும் அஹங்காரம் கரைந்து நீராக ப்ரம்ம உணர்வுப் பெருங்கடலில் சேர்வதே வாழ்வு
**கூறாத நிம்மதியில்=விள்ள முடியாத இதுவரை யாரும் விண்டிடாத முக்தி பேரானந்த நிம்மதி

***தாயொன்றும் சேயென்றே=எந்த ஒரு நிலையிலும் தாயை ஒட்டியே வளரும் கைக்குழந்தை



முதல் பக்கம் Part II

Comments