Click here for the Audio
எண்ணமிலா நெஞ்சத்திலே விளக்கெரிய நிஜம்-தெரிய
உச்சிஎழும் தாமரையில் இதழ்-விரியக் கண்டிடவே சென்றிடுவேன்.. நான்
(2)
எண்ணமிலா நெஞ்சத்திலே
(MUSIC)நானுணர்வு என்னிலே எங்கு இருக்கு அறிகிலேன் (2)
கண்டுவிடச் செல்கிறேன் வழியைக் காட்டு
புலன் பகையதனை வென்றிட-உன் அருளைக் கூட்டு
எண்ணமிலா நெஞ்சத்திலே விளக்கெரிய நிஜம்-தெரிய
(MUSIC)
சத்தமிடும் பார்-திரிந்து நெஞ்சமெனும் ஓர்-குரங்கு (2)
அப்பா அதைச்-சமைந்து எப்போது அமரவைப்பாய்
அப்பா அதைச்-சமைந்து இப்போதே அமரவைப்பாய்
(SM)
நான்கு-பேர்கள் தூக்குமுன் காடு-செல்லச் சாகுமுன் (2)
*ஞானத்தோடு கூட்டிச் செல்வாய் சூரிய பாதை
இந்த திருவுடையோன் வேண்டுகிலேன் **சந்திர பாதை
எண்ணமிலா நெஞ்சத்திலே விளக்கெரிய நிஜம்-தெரிய
உச்சிஎழும் தாமரையில் இதழ்-விரியக் கண்டிடவே சென்றிடுவேன்.. நான்
எண்ணமிலா நெஞ்சத்திலே
*ஞானமடைந்தோர் பிறப்பிறப்பிலா சூர்ய லோகத்தையும், மற்றோர் மீண்டும் புவி பிறப்பைக் கொடுக்கும் வண்ணம் சந்திர லோகத்தையும் அடைவர் என்பது ப்ரம்ம சூத்திரம்
** சந்திர பாதை=சந்திரனால் ஏற்படும் உபாதை. மன மயக்கம்(கிரக்கம்), சித்த கலக்கம்(பைத்தியம்) என இரண்டையும் தர வல்லது சந்திரனின் காந்த ஒளி. இந்த இரண்டினாலும் பாதிக்கப் படாத தன்மையைக் கொடுப்பது சூரிய ஒளி. சூரிய ஒளி கலக்கத்தை நீக்க வல்லது. புத்துணர்ச்சியும் உயிரூட்டமும் கொடுக்க வல்லது. ஞானத்தை அளிக்க வல்லது. எனவே சூரிய பாதையே சிறந்தது. .

Comments
Post a Comment