157 நான் பாட்டுப் பாடி(தாலாட்டு பாடி)




நான் பாட்டுப் பாடி நீ கேட்க வேண்டும்
தாளாத என் ஆசை கன்னையா
வெகு நாளாக என் பூஜை கன்னையா
நானாற்றும் என் பூஜை கன்னையா
(1+SM+1)
(MUSIC)
பொல்லாத-பாதை செல்லாமல்-நெஞ்சை
உன்மீது வைத்தேனே கன்னையா
(2)
பேயாக நோயாகச் செல்லாமல் வாட்டும்
என்  நெஞ்சம் நிற்காதோ கன்னையா
நான் பாட்டுப் பாடி நீ கேட்க வேண்டும்
தாளாத என் ஆசை கன்னையா
வெகு நாளாக என் பூஜை கன்னையா
                             (MUSIC)   
போகாது-போகாது அழுதாலும் போகாது
எனை-வாட்டும் மனமென்னும் நோயே
திரியாத இடமில்லை மனமென்ற அந்நாயை
நீ-வந்து என்னென்று கேளேன்.. கண்ணா..
நீ-வந்து என்னென்று கேளேன்
மனதிடமோர் பகையுமில்லை
அதனிடமோ என்மேல் கருணையில்லை
நான் பாட்டுப் பாடி நீ கேட்க வேண்டும்
தாளாத என் ஆசை கன்னையா
வெகு நாளாக என் பூஜை கன்னையா
(MUSIC)
பலதான-க்ரந்தங்கள் அதில்-ஞான வைரங்கள்
பல-உண்டு எனச் சொல்வார் ஐயே
தணியாத பசியொன்று அதிலென்றும் எனக்குண்டு
அறியாயோ என்-தெய்வம் நீயே
அவைகளில் அமிழ்ந்திருக்கும்  மதியளிப்பாய் நீ என் மனதினுக்கும்
நான் பாட்டுப் பாடி நீ கேட்க வேண்டும்
தாளாத என் ஆசை கன்னையா
வெகு நாளாக என் ஆசை கன்னையா

                           
*உன்-பாட்டில் நிற்காதோ=இனி எல்லாம் உன் பாடு எனும் சரணாகதி பாவத்தில் நெஞ்சம் அடங்காதோ








Comments